எமிஸ் பசலிப்பழ குளிர்களி

by Nirmal
181 views

தேவையான பொருட்கள் 

  • கிவி பழங்கள் – 4 
  • சீனி – தேவையான அளவு 
  • பாதம் – தேவையான அளவு (நறுக்கியது பொடிசாய்)
  • கிஸ்மிஸ் – தேவையான அளவு 
  • வெண்ணிலா எசன்ஸ் – 1/2 கரண்டி 
  • ஹெவி க்ரீம் – 3 கப் 
kiwi ice cream sample picture 1

பசலிப்பழ குளிர்களி செய்முறை 

  • முதலில், 2 கிவி பழங்களை துண்டுப்போட்டு மைய அரைத்துக் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
  • தொடர்ந்து, மீதமிருக்கும் 2 பழங்களையும் சின்னதாய் வெட்டி பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
  • பிறகு, பெரிய பௌலில் ஹெவி கிரீம், வெண்ணிலா எசன்ஸ், பாதாம், கிஸ்மிஸ் மற்றும் சீனியை கொட்டி நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
  • கலப்பானில் ஏற்கனவே பிரிட்ஜில் பதப்படுத்திய கிவி பேஸ்ட் மற்றும் ஹெவி க்ரீம் பேஸ்ட் இரண்டையும் ஒன்றாய் கலந்து மிதமாய் அரைத்திட வேண்டும்.
  • இறுதியாக, மைய அரைத்த கலவையை ட்ரெய் ஒன்றில் நிரப்பி அதில் நறுக்கிய கிவி பழத்துண்டுகளை அடுக்கிட வேண்டும்.
  • அதை பிரிட்ஜில் ஏறக்குறைய 7 – 8 மணி நேரங்களுக்கு பதப்படுத்திட வேண்டும்.
  • எமிஸ் பசலிப்பழ ஐஸ்க்ரீம் ரெடி. உண்டு மகிழுங்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!