உங்கள் பெயர்: தேன் நிலா
வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்: மொத்தம் 34
தொடர்கதைகள் சிறுகதைகள், குறு நாவல்கள் அடக்கம்.
உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்: பிரதிலிபி, அமேசான் கிண்டில் & யூ டியுப் ஆடியோ நாவல்
1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?
என்னையே புதிதாய் பார்ப்பதை போல். என்னை பற்றி எனக்கே தெரியாத புரியாத விஷயங்கள் அப்பொழுது தான் என் கருத்துக்கு தோன்றும்.
2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?
நேசத்தினால் என்னை கொன்றுவிடு கதையின் இரண்டாம் நாயகி குந்தவை. எவ்வளவு கஷ்டம் என்றாலும் அவள் கவலைக் கொள்ளாமல் மிகவும் இயல்பாக கடந்து சென்று விடுவாள்.
உணவில் அவளின் வேதனையை அடக்கி விடுவாள்.. கடந்த சில காலமாக இறுக்கமான முகமூடி அணிந்து கொண்ட உணர்வு. குந்தவையை போல் எதையும் இயல்பாய் கடக்க என்னால் இயலவில்லை.
அதனால் அவளை போல் டேக் இட் ஈஸி ஊர்வசி பாலிசி வழி இந்த உலகத்தை காண ஆசைப்படுகிறேன்.
3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?
காமத்தூரிகைஎன்ற கதை. மிகவும் யோசித்து எழுதினேன். ஆரம்பமே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதை போல் காட்சி. மிக பெரிய கருத்து அந்த கதையில் இருந்தது.
ஆனால் அதனை சொல்லி முடிப்பதற்குள் என் குடும்பத்தையே கழுவி ஊற்றி 100-க்கும் மேற்பட்ட ரிப்போர்ட்ஸ் தளத்தின் நிர்வாகத்துக்கு சென்று விட்டது. இருந்துமே வாசகர்கள் ஆதரவால் என் கருத்தை சொல்லி கதையும் ஹிட்.
4. ரைட்டர் ப்லோக் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
விமர்சனம் அளிக்கவே எனக்கு நேரமில்லை. அதனால் இதனை கண்டு கொள்ள நோ டைம். என் வாசகர்கள் எப்பொழுதும் எனக்கு இருப்பார்கள் என்ற நம்பிகையும் ஒன்று.
5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
பொறாமை..
6. எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?
குறிப்பிட்டு சொல்ல இயலாது. மூட் இருந்தால் எழுதுவேன்.
7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?
மகாபாரதம்.. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கர்ணனின் மரணத்தை மாற்றி விடுவேன். மேலும் அவன் மனைவியாக என்னையே சித்தரித்து எழுதுவேன். அவன் மேல் தீரா காதல் எனக்கு.
8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?
குளியலறை தான்.
9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
எந்த வகை கதையாக இருந்தாலும் குட்டியாக ஒரே ஒரு நல்ல கருத்து.
10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?
‘உயிர் அலையுதடி’ மைல் கல் எனக்கு அது. நிறைய வாசகர்களை எனக்கு அளித்தது. மேலும் நான் ரசித்து செதுக்கி காதலில் கரைந்து எழுதியதும் அதுவே.
11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?
காமத்தூரிகை தான். என் அம்மா வரை இழுத்து கொச்சை படுத்தி விட்டனர் சில நல்ல உள்ளங்கள்.
12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?
என் எழுத்து என் உரிமை.
நன்றி. வணக்கம்.
✌️கேட்டவுடன் கேள்விகளுக்கு பதிலளித்து அனுப்பிய தேன் நிலாவிற்கு அரூபி தளத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் ❤️
எழுத்தாளர் தேன் நிலா
previous post