வணக்கம்.
உங்கள் பெயர்:
ப்ரஷா
ப்ரஷாந்தி ஜெயக்குமார்.
வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்:
நீயே என் ஜனனம்!
தீர்த்தக் கரையினிலே!
அகம் தொலைத்தேன் ஆருயிரே!
அனிச்ச மலரழகே!
வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு!
திருநீலகண்டனின் அயனி!
மெழுகு பொம்மைகள்!
உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்:
அருண் பதிப்பகம்
ப்ரியாநிலையம்
We can
இலங்கை முழுவதும் உள்ள பூபாலசிங்கம்
ஜெயா புக் ஷாப்
Adhi international export & import PVT LTD
1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?
இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்வி கொஞ்சம் பெரிய விடை தான். என்னுடைய வாசிப்பு தான் எனக்கான எழுத்துக்கு வித்திட்டது. எழுத்து ஒரு இடத்தில் ஓய்ந்து விடக்கூடாது என்பது என்னுடைய தேடலில் இருக்க வேண்டும் என நான் நினைத்த விஷயம்.
அதேபோல ஒரே மாதிரியான கரு கொண்ட கதைக்களங்களை விட இந்த கதைக்களம் வித்தியாசமாக இருக்கிறது என்னும் எண்ணம் எனக்குள் இருந்து முளைத்து அது என் படைப்பில் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்..
ஆக படைப்புக்கான தேடலின் போது எனக்கு தோன்றிய விஷயங்கள் நிறைய அறிந்து வைத்திருக்கிறேன், இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும். சமூகம் தொடர்பான அறிவு இன்னுமே மேம்பட வேண்டும்.
ஒரு படைப்பாளியின் படைப்பு வானத்திலிருந்து கொட்டி விடுவதில்லை அவனும் அவன் சமூகமும் சார்ந்த விஷயங்களிலிருந்து பெறப்பட விடயங்களில் கூட ஒரு அழகான படைப்பு உண்டு ஆக என் தேடல் எனக்குள் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
நான் எது எதை நோக்கி நகர்கிறேன் எனக்கான தேடல் எது என் படைப்புக்கான தேடல் எது என்பதன் ஆரம்பம், அறிவு, விடை எனக்குள் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது நான் எழுத எடுத்த சமயம் எனக்குள் தோன்றிய விஷயம்.
2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?
இதற்கு மூன்று கதாபாத்திரங்களை என்னால் கூற முடியும்..
என்னுடைய தீர்த்தக் கரையினிலே நாவலின் நாயகி சுமித்ரா அவளின் பார்வை, அவளின் நிமிர்வு எனக்கு பிடித்த ஒன்று. அவள் மூலம் காணும் உலகில் ஒரு நேர்த்தி உண்டு என்பது என் கருத்து.
தீர்த்தக் கரையினிலே கதையின் நாயகன் தனஞ்ஜெயன். நான் ஒரு ஆணாக இருந்தால் ஒரு ஆணின் மன உணர்வுகள் வலி வேதனைகள் அவனுக்கான பிரத்தியோக நுண்ணிய உணர்வுகள், சமூகத்தில் அதிகம் பேசப்படாத மறைக்கப்படும் ஆணின் பக்கங்கள் உண்டு அதை அவன் பார்வையில் காண விருப்பம் உண்டு..
அகம் தொலைத்தேன் ஆருயிரே நாவலின் நாயகி பௌர்ணமி இந்த கதாபாத்திரத்தின் பெண்மை சார்ந்த கொள்கைகளில் எனக்கு ஒரு பிடித்தம் இருந்தது.
ஆக ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக காண முற்படும் உலகம் இந்த அம்சங்களை கொண்டு காண முற்படுமாயின் இதை விரும்புகிறேன்.
3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?
Intellectual disability, அல்லது ஆட்டிசம் இது கொஞ்சம் controversy ஆன சப்ஜெக்ட். இந்த சப்ஜெக்டை மையமாகக் கொண்டு ஒரு கதை எழுதுவதில் எனக்கு நிறைய தயக்கம் உண்டு இதுல ரெண்டு வகையான கதை எழுதலாம் ஒன்னு சமூகம் சார்ந்தது, உளவியல் சார்ந்தது சமூகம் சார்ந்தது கொஞ்சம் controversy யா இருந்தாலும் தயக்கமில்லாமல் எழுதலாம் உளவியல் சார்ந்துனும் போது ஏன் இவங்களுக்குள்ள ஒரு காதல் மலரக்கூடாது?
ஏன் இவங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கக் கூடாது? ஏன் இவங்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்க கூடாது? ஏன் இவங்களுக்கும் ஒரு வளமான குடும்பம் இருக்க கூடாது? அப்படிங்கிற என்னோட கேள்வி.
அது சார்ந்து எழுதும் போது ரொம்ப கவனமா எழுதணும் ஒரு நூல் இலையில் தப்பினாலும் நாங்க கொண்டுவர நினைக்கிற கருத்துல பெரிய பாதகம் ஏற்படலாம் ஆக இது ரொம்ப கான்ரவசியான சப்ஜெக்ட் நான் கொஞ்சம் நிறையவே லேர்ன் பண்ணனும். தெரிஞ்சுக்கணும் பக்குவப்படணும் எழுதணும்னு நினைக்கிறேன்.
4. ரைட்டர் ப்லோக் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
இது ஒரு நல்ல கேள்வி..
நாம பொதுவா வாசிக்க எழுத ரெண்டுக்குமே வராது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்காக. வாசிக்க வார இடத்துலையோ, எழுத வர இடத்துலையோ நமக்கான ஒரு ஸ்பேஸ் கிடைக்கலன்னா இந்த பிளாக் இரண்டு பக்கமுமே நடக்கும். எழுதறவங்களுக்கு கண்டிப்பா கற்பனை சுதந்திரம் வேண்டும்.
அவங்களோட எழுத்த, அவங்களோட கதாபாத்திரத்தை, அவங்களோட கதை கருவை இன்னொருத்தவங்களோட தலையீடு இல்லாத வகையில எழுதி முடிக்கிறதற்கான சுதந்திரம் தனிமை கண்டிப்பா தேவை.
இதுல இன்னொரு விஷயமும் இருக்கு நாம ஒரு கதைக்கான நோட்டை எடுத்துட்டோம்னா முடிஞ்ச அளவு அதுக்காக நாங்கள் நிர்ணயித்திருக்க காலப்பகுதியில் எழுதி முடிகிறது ரொம்ப நல்லது (personal experience) காலம் தாழ்த்த, தாழ்த்த நாம என்ன பிளான் பண்ணி வச்சிருக்கோமோ நம்ம மைண்ட் எதை நோக்கி இந்த கதையை கொண்டு போகணும் நினைக்கிறோமோ அதை மறந்து போகக் கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கு.
சோ ஒரு கதையை எழுத டிசைட் பண்ணிட்டா அதுக்கான ஒரு ட்ராப்ட் நம்ம கைல இருக்கிறது நல்லதுனு நினைக்கிறேன்.
கருத்து சுதந்திரம் இருக்கிற மாதிரி எழுத்து சுதந்திரம் நல்லது. We are matured not kids so நம்ம என்ன எழுத போறோமோ அதை நாம தெரிஞ்சுகிட்டு தான் எழுதுறம்.
அதே சமயம் ஒரு சின்ன விஷயம் ஒரு எழுத்தாளனுடைய ஐந்து அத்தியாயங்களையும் மட்டும் கொண்டு அவர்களுடைய கதையை நமக்கு தீர்மானிக்க முடியாது ஒரு எழுத்தாளருடைய குறிப்பிட்ட அத்தியாயங்களை வைத்து இந்த கதை இப்படித்தான் நகருதுன்னு நாம சொல்ல முடியாது சோ அவங்களுடைய படைப்பை நிறைவு செய்யும் வரைக்கும் கொஞ்சம் பொறுமை காக்கலாம்.
பிடிச்சிருக்கா படிக்கலாமா அது முடியும் வரைக்கும் கொஞ்சம் அவங்களுக்கான அவகாசம் கொடுக்கலாம். முடிவு என்ன வேணாலும் இருக்கலாம் நம்ம நினைக்காத பக்கத்தை நோக்கி நகரலாம் நம்மள ஆச்சரியப்படுத்த வைக்கலாம் சோ இப்படி நிறைய நிறைய இருக்கு..
முக்கியமா நிறைய குடும்பங்கள்ல என்ன பெரிய வேலை ஆன்லைன்ல எழுதுறிங்க அப்படிங்கற ஒரு கேள்வி இருக்கு இந்த குடும்பங்களுட மட்டம் தட்டுதலே நிறைய பெண் எழுத்தாளர்களுக்கு முட்டுக்கட்டையா இருக்குது..
சோ ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புகிறேன் என்ன செய்கிறீர்களோ அதை செஞ்சுட்டே இருங்க. Don’t give up. என்னைக்கும் நம்மளுடைய ஆக்சன் பேசும்.
5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
ஒன்னே ஒன்னு ஹெட் வெயிட், தானுங்குற அகங்காரம் ஒன்னு தன்னையும் அழிக்கும் இன்னொருத்தங்களை அழிக்கும். தான் மட்டுமே தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் தான்தான் பெஸ்ட் அப்படிங்கிற எண்ணம் அடுத்தவனையும் முன்னேற விடாது நம்மளுடைய முன்னேற்ற பாதையை மட்டுமே பார்க்காமல் எதிரில் இருக்கிறவங்களுடைய முன்னேற்ற பார்வையும் சேர்த்து பார்ப்போம். இது வந்து ரொம்ப டேஞ்சரான விஷயம்னு நினைக்கிறேன்.
6 எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?
I’m a night person. மோஸ்ட்லி மிட் நைட், 11 மணிக்கு பிறகான நேரம் எனக்கான நேரம். அந்த இரவு நேரத்தில் எனக்கு எந்த வித தொந்தரவும் இருக்காது. இன்னொன்னு அமைதி அது ரொம்ப பிடிச்ச விஷயம்.
பொதுவாவே நான் இருக்கிற சூழல் சொசைட்டி ரொம்ப பீஸ்ஃபுல்லா தான் இருக்கும் ஆனாலுமே அந்த இரவு நேரம் ரொம்ப பிடிக்கும். நிலவும் இரவும்னு சொல்லுவோம் இல்லையா அப்படி பிடிக்கும்..
7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?
ராமாயணம் இந்த பதிலுக்கு பொங்கல் கிடைக்குமான்னு தெரியல.. ஆனா நான் ரொம்ப நினைப்பேன் சீதைகான முடிவுல எனக்கு உடன்பாடு இல்ல.
சீதையோட முடிவில் நியாயம் இல்லன்னு தெரிஞ்சும் சீதை அதை அமைதியா ஏத்துட்டதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லவே இல்லை ராஜ தர்மத்தை காப்பாத்தின ராமர் ஏன் பதி தர்மத்தை காப்பாத்தாம போயிட்டாருன்னு எனக்கு இன்னும் வரைக்கும் ஒரு கேள்வி இருக்கு.
8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?
எழுத்தாளர்களுக்கு பொதுவாகவே கதை சார்ந்த விஷயங்கள் நாம சுத்தி இருக்க சூழலிலேயே இருக்குன்னு நினைப்பேன்.
நான் ரொம்ப டாக்குமெண்டரி படிக்கிற பார்க்கிற ஆள். அதுல அப்படி ஒரு கிரேஸ் டாக்குமெண்டரி மூவினால் ஐயம் மேட் அப்படி சொல்லலாம் சோ அதுபோல நம்மளுடைய படைப்பு இருக்கணும்ங்கறதுல எனக்கு ஒரு க்ரேஸ் இருக்கு.
கதை சார்ந்த விஷயங்கள் டே டுடே லைஃப்ல நடக்கிறதா கூட இருக்கலாம்.. ஏன் இப்போ ஒரு உண்மை சம்பவத்தை கூட நான் கதையா எழுதிக்கிட்டு இருக்கேன்..
9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?
ஹம்… எளிமை இருக்கலாம் அப்படின்னு நினைக்கிறேன். ஏழ்மைக்கும் எளிமைக்கும் வித்தியாசம் இருக்கு எழுத்தாளர்கள் மீன்ஸ் not boss அவங்கள அணுகவே முடியாது பக்கத்துல நெருங்க முடியாது சண்டகாரங்க வாயாடு வாங்க, எல்லாத்தையும் போஸ்ட் போடுறாங்க ஜஸ்ட் நம்மளுடைய அபிமானத்தை கூட சொல்ல முடியல.
ஸ்டோரியை பற்றி நல்லதா கூட பேச பயமா இருக்கு ஏன்னா அவங்க ஒரு பப்ளிசிட்டி சீகர் அப்படின்னு நிறைய வாசகர் மனதில் தயக்கம் இருக்கு. சோ நாம இவ்வளவு நெகட்டிவ் கொடுக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.
அதே சமயம் சக எழுத்தாளர்கள் மேல இவ்வளவு வன்மம் தேவலையே அப்படின்னு நான் நினைத்த நிறைய இடங்கள் இருக்கு. நல்லது கெட்டது எல்லாத்துலயும் இருக்கு.
எவ்ரி பர்சன் நாட் பெர்பெக்ட் சோ யாருமே முழுமையான மனுஷன் இல்ல ஒருத்தர் கிட்ட ஒரு நல்லது இருந்தா பத்து கெட்டது இருக்கும் சோ நம்மளுடைய வெஜன்ஸ ஒரு ப்ரொபஷனல் ப்ளாட் ஃபார்ம்ல காட்ட வேண்டியது இல்லை.
ஒரு டீச்சர் ப்ரொபஷனலா இருக்காங்க ஒரு கவர்மெண்ட் ஆபிசர் ப்ரொபஷனலா இருக்காங்க ஒரு ரைட்டர் ஏன் ப்ரொபஷனலா இல்லாம இருக்காங்கங்குறது எனக்கு ரொம்ப நாளா இருக்க ஆதங்கம்..
இந்த பீல்டுல நான் பார்த்த வரைக்கும் ப்ரொபஷனலா இல்ல பர்சனல் வெஜென்ஸ ரொம்பவே கொட்டுற இடத்தை பார்த்து இருக்கேன். சோ ரைட்டர் தானே நீங்க கொஞ்சம் ப்ரொபஷனலா இருக்கலாம் அப்படிங்கிற மாதிரி எனக்கு ஒரு எண்ணம் இருக்கு..
மே பி இந்த ப்ரொபஷனலிசம் தான் பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கான இடத்தை ரொம்ப மரியாதையா இன்ன வரைக்கும் எங்களை போன்றவங்களை பார்க்க வைக்கிறது என்பதும் என்னுடைய அபிப்பிராயம்
10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?
நான் நினைக்கிறது வேதமடி நீ எனக்கும் மற்றும் திரு நிலக்கடனின் அயனி இது ரெண்டையும் நினைப்பேன் ஆனால் இன்று வரைக்கும் என்னுடைய வாசகர்கள் நீயே என் ஜனனத்தை விட்டுக் கொடுக்க மாட்டேங்க..
11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?
இதுவரைக்கும் அப்படி ஒன்னும் இல்ல இனி இருந்தா கண்டிப்பா சொல்லுவேன்.
12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?
எழுத்தும் எழுத்து சார்ந்த துறையும் மட்டுமே எனக் கூறியதுனு இல்ல ஐ அம் எ பிசினஸ் வுமன் சோ எனக்கு கீழ நிறைய வொர்க்கர்ஸ் இருக்காங்க நான் ஒரு பார்ட் ஆஃப் குரூப்ப லீட் பண்றேன் படிச்சு கொடுக்கிறேன் ஆக இது எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு சொல்லக்கூடிய ஒரு விஷயம் நிதானம், பொறுமை, டேடிக்கேஷன், ஹார்ட் ஒர்க் இந்த நான்கும் ரொம்பவே முக்கியம்.
எந்த துறையா இருந்தாலும் இந்த நாலு விஷயமும் நம்மளை என்னைக்கும் கைவிடாது.
அது போல நமக்கு மூன்று விஷயம் ரொம்ப தேவை மத்தவங்க சொல்றத கேட்கக்கூடிய நிதானமும் பொறுமையும், மத்தவங்களுடைய கருத்தை உள்வாங்கி அதை சரியா கொண்டு சேர்க்க கூடிய நிதானம், இன்னொன்னு முக்கியமானது அவங்களுக்கான பதிலை அது எது சரியோ அதை எப்படி கொடுக்க முடியுமோ அப்படி பொறுமையா பொறுப்போட கொடுக்க வேண்டிய நிதானத்தோடு கூடிய ஆளுமை.
கண்டிப்பா பொறுமையிலயும், நிதானத்துலயும் ஒரு வித ஆளுமை இருக்கும்னு நான் ரொம்பவே நம்புகிறேன்.
Finally உங்களோட கம்ஃபர்டபுலான இந்த நேர்காணலுக்கு என்னுடைய
நன்றி. வணக்கம்.