ஒரு தலைக் காதல்

by ரியா ராம்
161 views

டேய் ஆரவ் வேலைக்கு நேரமாச்சு சீக்கிரமா கிளம்பு என்று செல் போனில் ஒரு பெண்ணின் குரல் கேட்டு கொண்டு இருந்தது அதில் மெதுவாக எழுந்த ஆரவ் அந்த போனை எடுத்து அவன் அம்மாவின் குரலை கேட்டு கொண்டே அதற்க்கு குட் மார்னிங் சொல்லி விட்டு அதை ஆப் செய்து விட்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் .

ஆரவ் பத்தி சின்ன அறிமுகம் ஆரவ் 28 வயது நிரம்பிய இளைஞன் பார்ப்பவர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் ஒரு அழகு. குடும்பத்திற்கு கடைசியாக பிறந்தவன் அவனுக்கு முன் ஒரு அண்ணன் அக்கா உண்டு அவர்கள் திருமணம் முடிந்து தங்கள் வாழ்க்கையை பார்க்க இவன் தனக்கு திருமணம் இப்போது வேண்டாம் என்று தன் பெற்றவர் களிடம் சொல்லிவிட்டு லண்டனில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான் தினமும் அவன் தாயின் குரல் கேட்க வேண்டும் என்பதற்காக அவரின் குரலை அலாரமாக வைத்துள்ளான் .

ஆரவ் ஒரு கம்பெனியில் மேனேஜராக இருக்கிறான் .நல்ல வேலை நல்ல சம்பளம். தன் வாழ்க்கையில் ஒரு முறை காதலில் தோற்றதால் அவனுக்கு காதல் கல்யாணம் பெண்கள் என்றால் அலர்ஜி அதனால் தான் தனக்கு திருமண பேச்சை தாய் ஆரம்பித்த உடனே இங்கு தன் வேலையை மாற்றி கொண்டு வந்து விட்டான் காலையில் அவசரமாக தன் வேலைகளை முடித்து விட்டு அலுவலகம் கிளம்பியவன் அங்கு சென்று தன் வேலைகளில் மூழ்கினான் அப்போது அவனது போன் அடிக்க எடுத்து பார்த்தான் அது தன் தந்தையின் எண்ணாக இருக்க அவர் காரணம் இல்லாமல் இந்த நேரம் போன் போட மாட்டார் என்பதை உணர்ந்தவன் வேகமாக அதை ஆன் செய்து தன் காதில் வைத்தான் .

அதில் செல்லப்பட்ட செய்தியில் அதிர்ந்தவன் தன் மேலதிகாரியின் சென்று தனக்கு இரண்டு மாதம் விடுமுறை வேண்டும் என்று கேட்டு அதற்கான காரணத்தை சொல்ல , அவரும் அவன் வேலைக்கு சேர்ந்த இந்த மூன்று வருடங்களில் அவ்வளவாக விடுமுறை எடுக்காத காரணத்தால் அவனை அவசர வேலைகளை முடித்து விட்டு கிளம்புமாறு கூற அவனும் சரி என்று தன் வேலைகளை முடித்து விட்டு மீதி பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு தான் இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்தான்.

அப்படி இருந்தும் மறு நாள் தான் அவனால் கிளம்ப முடிந்தது. பிளைட்டில் சென்னையில் இறங்கியவன் தனக்காக காத்திருந்த தன் அண்ணன் மற்றும் தன் அக்காவின் கணவர் இருவருடன் சில பல நல விசாரிப்புகள் பின்பு காரில் ஏறினான் . காரில் சென்று கொண்டிருக்கும் போது தன் தந்தை சொல்லியது நியாபகம் வந்தது அதில், டேய் ஆரவ் நல்லா இருக்கியா ஆரவ், அப்பா நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க , அம்மா எல்லாரும் ஓ கே தான என்ன இந்த நேரம் கால் பண்ணி இருக்கீங்க எதாவது பிரச்சினையா என்றான் அவரை பதில் பேச விடாமல் ஆரவ் அப்பா, டேய் எல்லாம் நல்லா இருக்கோம் இங்க உங்க அம்மா தான் உன் கல்யாணத்தை பத்தி நினைச்சி நினைச்சி உடம்ப கெடுத்து இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கா என்றார் உடனே பதறியவன் என்னப்பா சொல்றீங்க என்றான். உடனே அவர் இப்ப எந்த பிரச்சனையும் இல்ல ஆனா அவ இப்படியே இருந்தா பின்னாடி ரொம்ப பிரச்சனை வர வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க அதான் ஒரு வேள உன்ன பார்த்து மூணு வருஷம் ஆயிடுச்சு இல்ல அதான் உன்ன பாத்தாவது சரி ஆயிடுவான்னு தோணுது அதனால உன்னால முடிஞ்சா கொஞ்சம் வந்துட்டு போறியா என்றார். அவனும் சரி என்று சொல்லி இதோ வந்தும் விட்டான். சிறிது நேரத்தில் வீடு வர அவன் அம்மாவே அவனை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார். அவனும் மூன்று வருடங்கள் கழித்து தன் தாயை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக உள்ளே சென்றான் .

அதன் பின் அவன் அக்கா , அண்ணன் , அண்ணி , தந்தை , குழந்தைகள் என எல்லாரிடமும் நலம் விசாரித்து விட்டு தன் தாயிடம் வந்தான். ஆரவ், அம்மா எப்படி இருக்க ஏன் உன் உடம்ப பாத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்க என்றான் கொஞ்சம் வருத்தமாக ஆரவ் அம்மா, டேய் கண்ணா நான் நல்லா இருக்கேன் என் உடம்புல ஒன்னும் பிரச்சனை இல்ல மனசு தான் சரியில்லை உன் அண்ணன் அக்கா இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சு அவங்க குழந்தைங்க கூட சந்தோசமா வாழ்றத பார்த்துட்டேன், அதே மாதிரி நீயும் உன் பொண்டாட்டி பிள்ளைங்க அப்படின்னு வாழ்ந்தா நான் நிம்மதியா சந்தோசமா இருப்பேன் என்றான் கண்களில் கண்ணீருடன் , அவரை பார்த்த ஆரவ் மனம் நொந்து தன்னுடைய சுய நலத்தால் தன் தாய் எவ்வளவு கட்டப்பட்டுள்ளார் என புரிந்து கொண்டு அவரின் கண்ணீரை துடைத்து விட்டு அவரிடம் ஆரவ், அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீங்க பொண்ணு பாருங்க. ஆனா, என்னால இப்ப இங்க இருக்க முடியாது கல்யாணம் முடிஞ்ச உடனே நான் மறுபடியும் லண்டன் போயிட்டு ஒரு வருசம் கழிச்சு என்னோட வேலையை முடிச்சிட்டு இங்க வந்துடுவேன் அதனால என் கூட லண்டன் வர சம்மதிக்குற மாதிரி பொண்ணு பாருங்க என்றவன் தன் அறைக்கு சென்று விட்டான் . அவன் சொல்லியதில் மகிழ்ந்தவர்கள் உடனடியாக கல்யாண வேலையை பார்க்க ஆரம்பித்தனர் . ஒரு வாரம் கழித்து, அன்று காலையில் தான் திருமணம் முடிந்து முதல் இரவுக்காக அலங்கரிக்கப்பட்ட தன அறையில் அமர்ந்திருந்தான் ஆரவ் . அவன் மனம் தான் திருமணத்திற்காக ஒப்புக் கொண்ட உடனே தன் தாய் அவசரமாக ஏற்கனவே பார்த்த பெண்ணுடன் தன் திருமணத்தை வேகமாக நடத்தியதை நினைத்து கொண்டிருந்தான் . அவன் மனம் அவர்கள் எல்லாம் பிளான் பண்ணி விட்டு தான் தன்னை வர வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் . அப்போது அறைக்குள் கையில் பால் சொம்புடன் வந்தைவளை பார்த்தான் , அவள் தன் தாயின் சகோதரரின் மகள் ஆர்த்தி தன் சொந்த தாய் மாமன் மகள். அழகு பதுமை இல்லையென்றாலும் செயற்கை ஒப்பனை எதுவும் இயற்கையான அழகில் இருந்தாள். அவளை கடந்து செல்வோர் அவளை ஒரு தடவை திரும்பி பார்க்க வைக்கும் அழகு. அவளை பார்த்தபடியே அமர்ந்து இருந்தவன் அருகே வந்தவள் அவனிடம் பால் சொம்பை நீட்ட அவனும் ஒன்றும் சொல்லாமல் வாங்கி வைத்து விட்டு எழுந்து நிற்க்க அவள் அவன் எதிர் பாராத விதமாக அவன் காலில் விழுந்தாள் . உடனே பதறியவன் அவளை வேகமாக தூக்கி நிற்க்க வைத்து அவளை கடிந்து கொண்டான் இனிமேல் இவ்வாறு செய்யாதே என்று உடனே அவளும் சரி என்று தலையாட்டினாள் .

ஆரவ், ஆர்த்தி இது தான உன்னோட பேர் என்றான் அதற்க்கு அவள் மெதுவாக தலையாட்ட ஆரவ், ஏன் நீ வாய திறந்து பேச மாட்டியா வந்தது ல இருந்து தலையை மட்டும் ஆட்டுற என்றவன் இடையில் பேச வந்தவளை கையை நீட்டி தடுத்து விட்டு நான் பேசி முடிச்ச உடனே பேசு என்றான் . அவளும் சரி எனும் விதமாக அமைதியாக இருக்க ஆரவ் தன் பேச்சை தொடர்ந்தான் நான் காலேஜ் படிக்கும் போது என்னோட படிச்ச ஆதினிய விரும்பினேன் அவளும் என்ன விரும்புனா நாங்க படிச்சி முடிச்சு இங்க வேலைக்கு சேர்ந்தும் நாங்க ஒருத்தர ஒருத்தர் உயிரா தான் விரும்பினோம்.

ஆனா, கொஞ்ச நாள் அவ ஆபிஸ் பக்கம் வரவே இல்ல நான் என்ன எதுன்னு விசாரிச்ச அப்போ தான் தெரிஞ்சது அவ அப்பா இறந்துவிட்டதாகவும் அவர் கடைசி ஆசைன்னு சொல்லி அவள அவ மாமா மகனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்களாம் இதை கூட அவ தான் அவ பிரண்ட் கிட்ட சொல்லி அனுப்பினா நான் அந்த நிமிசம் ரொம்ப மனசு ஒடைஞ்சு போயிட்டேன்.

என்னால நம்பவே முடியல எப்படியோ அவ பிரண்டு மூலமா அவள சந்திக்க ஏற்பாடு பண்ணேன் அவளும் அவ கணவன் கூட வந்தா அத பார்த்ததும் எனக்கு தெரிஞ்சிடுச்சு அவருக்கு எங்க விசயம் தெரியும் அப்படின்னு அவ வந்த உடனே என் கால்ல விழுந்துட்டா நான் ஒரு நிமிஷம் பதறி அவள தூக்க நினைச்சேன் ஆனா அதுக்குள்ள அவ கணவரே தூக்கி விட்டார் ஆதினி, சாரி ஆரவ் நான் உன் கிட்ட என்ன சொன்னாலும் உன்னால ஏத்துக்க முடியாது எனக்கு தெரியும் ஆனா என்னோட காதல் பெருசா எங்க அப்பா கடைசி ஆசை பெருசான்னு கேட்டா நான் எங்க அப்பா ஆசை தான் பெரிசுன்னு சொல்வேன் அதான் நான் இவங்கள கல்யாணம் பண்ணிட்டேன்.

இவங்க கிட்ட நம்மள பத்தி எல்லாம் சொல்லிட்டேன் இவங்களும் என்ன புரிஞ்சி என் மனசு மாற டைம் கொடுத்து இருக்காங்க அதனால நானும் கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கையை ஏத்து வாழ பழக போறேன் நீயும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சா நான் சந்தோசமா இருப்பேன் என்றாள் .

ஆரவ், சாரி ஆதினி என்னால உங்கள மாதிரி உடனே மனச மாத்திக்க முடியாது ஆனா அதுக்காக உங்களையே நினைச்சிட்டு இருக்க மாட்டேன் நீங்க என்ன பத்தி யோசிக்காம உங்க வாழ்க்கையை வாழ பாருங்க என்றவன் அவள் கணவனிடம் வாழ்த்துக்கள் சகோதரா என்றவன் வேகமாக வெளியே தன் வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு வந்து விட்டான்.

ஆனால் அவனால் ஆதினி போல தங்கள் காதலை அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை ஒவ்வொரு நாட்களும் அவனுக்கு நரகமாய் கழிந்தது . இதற்கிடையில் அவனின் தாய் வேறு அவனின் கல்யாணம் பற்றி பேச்சை எடுக்க அவன் தன் கம்பெனியின் மூலம் லண்டனில் வேலை ஏற்பாடு செய்து அங்கு சென்று விட்டான் .

இதை ஆர்த்தியிடம் சொல்லியவன் அவளை பார்த்தவாறே இருந்தான் ஆர்த்தி, சரி பாவா இப்ப நான் என்ன செய்யனும் அத சொல்லுங்க என்றாள் ஆரவ், அவள் அப்படி கேட்ட உடனே அவளை பார்த்து முழித்தான் அதன் பின் சுதாரித்து அவளிடம் புரியலை என்றான் ஆர்த்தி, தான் கேட்டது அவனுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்தவள் அவனை பார்த்து சாரி பாவா நானே சொல்றேன் ,என்று தொடர்ந்தாள்,

பாவா நீங்க லவ் பண்ணுனது, அது பெயிலியர் ,ஆனது நீங்க லண்டன் போனது, அங்கேயும் சோகமா சுத்துனது, அதுக்கு அப்புறம் உங்களுக்குள்ளேயே ஒரு கோட்டை போட்டு வாழ்ந்தது, இப்ப அத்தைக்காக என்ன கல்யாணம் பண்ணது எல்லாம் எனக்கு தெரியும் என்று அவள் கூற ஆரவ் எப்படி என்பது போல பார்த்தான் அவன் பார்வையை புரிந்து கொண்ட ஆர்த்தி ஏனா நான் உங்கள சின்ன வயசுல இருந்தே விரும்புறேன் .

எங்க அப்பா உங்க அம்மா இரண்டு பேரும் எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க தான் என்னோட கணவர் அப்படி சொல்லி தான் வளர்த்தாங்க ஆனா உங்களுக்கு அத சொல்ல மறந்துட்டாங்க நானும் உங்களை என் மனசுல என்னோட கணவரா நினைச்சு தான் வாழ்ந்துட்டு வர்றேன். அதனால உங்கள பத்தி எல்லாம் எனக்கு தெரியும் . நீங்க லவ் பண்ணுறது தெரிஞ்ச உடனே நான் ரொம்ப மனசொடைஞ்சி இருந்தேன் அப்ப எங்க அப்பா தான் என்னோட மனசு மாறுதலுக்காக லண்டன் அனுப்பி வச்சாங்க .

நான் அங்க போயிட்டேன் கொஞ்ச நாள் உங்க நினைப்பு என்ன பாடா படுத்துச்சு அடுத்து என்ன நானே சமாதானம் செஞ்சு இனிமே ஊருக்கு போகாம இங்கேயே இருந்து உங்கள நினைச்சி கிட்டே வாழ தான் ஆசை பட்டேன் அதே மாதிரி படிச்சு முடிச்சிட்டு இங்கேயே வேலைக்கும் சேர்ந்தேன் அப்ப தான் இங்க உங்கள பார்தேன் .

அதுவும் எப்பவும் சிரிச்ச மாதிரி இருக்குற நீங்க சோகமா இருந்தீங்க அத பார்த்த உடனே மனசு ரொம்ப வலிச்சது உடனே அப்பாவுக்கு போன் போட்டு விவரம் கேட்டேன் அப்ப தான் சொன்னாங்க உங்க காதல் தோல்வி பத்தி நானும் சரின்னு வச்சிட்டு உங்கள பார்த்துட்டு என் வேலையை பார்த்தேன் அப்ப அத்தை ஒரு நாள் போன் போட்டு என்ன உடனே ஊருக்கு வரனும் இல்ல நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னாங்க நானும் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தாலும் அவங்க கேட்கல அதனால கிளம்பி வந்தேன் அப்ப தான் சொன்னாங்க எனக்கு உங்க கூட ஒரு வாரத்துல கல்யாணம் அப்படின்னு நான் என்ன தான் உங்கள விரும்பி இருந்தாலும் உங்க மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கும் போது நான் எப்படி உங்கள கல்யாணம் பண்ண முடியும் அதனால அத்தை கிட்ட வேண்டாமுன்னு சொன்னேன் ஆனா அவங்க கேட்கவே இல்ல அதான் நானும் உங்கள கல்யாணம் பண்ணிகிட்டேன் உங்க மனசு ஆதினிய மறந்து இந்த ஆர்த்தியை ஏத்துக்குற வரைக்கும் நான் காத்து இருக்கேன் நீங்க உங்க மனச போட்டு வருத்தாம நிம்மதியா தூங்குங்க என்றாள் .

அவள் பேசுவதை கேட்டவன் அவளை மெய் மறந்து பார்க்க அவள் உலுக்கிய உடன் சுய நினைவுக்கு வந்தான் ஆரவ் , ஆர்த்தி நீ சொன்ன மாதிரி எனக்கு டைம் வேணும் தான் அது ஆதினிய மறக்க இல்ல ஏனா அவங்க எப்ப இன்னொருத்தர் மனைவியா ஆனாங்களோ அப்பவே அவங்கள நான் மறந்துட்டேன் .

உன்ன நான் எப்பவும் மாமா பொண்ணா மட்டும் தான் நினைச்சேன் அதான் உன்ன ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும் நாம லண்டன்ல போய் நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம் சரியா என்றான் அவளும் மகிழ்ச்சியாக தலை அசைத்தாள்.

பின் இருவரும் நிம்மதியாக உறங்கினர். ஆரவ் ஆர்த்தி தான் இனி தன் வாழ்க்கை எனும் தெளிவான முடிவுடனும் ஆர்த்தி தன் காதலை உரியவரிடம் சொல்லி நிம்மதியில் .

இவர்கள் வாழ்க்கை இனி நல்லபடியாக தொடரும் என்பதில் ஐயமில்லை ஆரவ் காதல் தோல்வியில் முடிந்தாலும் சிறு வயதிலிருந்து வனை ஒரு தலையாக காதலித்து வந்த ஆர்த்தி காதல் வெற்றி பெற்றது .

நன்றி***நன்றி ***நன்றி***

இந்த கதையில் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் .

உங்கள் அன்புடன் நான்

ரியா ராம் .

You may also like

Leave a Comment

error: Content is protected !!