ஒரு நாள் போட்டி கதை: எண்ணத்தின் தெளிவு செயலின் வெற்றி

by admin 2
30 views

எழுதியவர்: சபி அரவிந்த்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் சுறாவோடு !

அது ஒரு மீனவ குக்கிராமம் அங்கு  50 குடிசை வீடுகள் அப்போது இருந்தது. அதில் இராபர்ட் வீடும் ஒன்று. இராபர்ட்யின் மகன் பெயர் ஹென்றி. 

       ஹென்றிக்கு எப்பொழுதும் அவர்தந்தை என்றால் மிகவும் பிடிக்கும். அவர் என்ன வேலை செய்தாலும்  சிறுவயதிலிருந்தே விரும்பி ரசிப்பான். அவர் எங்கே சென்றாலும்  கூடவே சென்று வருவது அவனின் வழக்கமாக இருந்தது. அப்பா ஒரு மீனவர் என்பதால் அவர் கடலுக்கு செல்லும் போதெல்லாம் தானும் வருவதாக கூறி அவருடன் சென்று வருவான்.

                  தன் அப்பாவுடன்  செல்லும்போதெல்லாம் அவன் மனதில் தோன்றிய விஷயம் என்னவென்றால் தன் அப்பா சிறந்த புத்திசாலி எனவும் அவர் கடலுக்கு சென்று வந்தாலே தாறுமாறாக நிறைய மீன்களை கொண்டு வருவார் என்பதுமே அவனுடைய எண்ணம்.

       ஆனால்  இராபர்டிக்கோ வேறு எண்ணம் நாம் எவ்வளவு மீன்களை பிடித்தாலும் நம்மால் ஒரு முறை கூட பெரிய சுறாவை பிடிக்க முடியவில்லையே! என்பது தான் அவருடைய பெரிய “மன வருத்தமாக” இருந்தது. 

            ஹென்றியும் அவர் தந்தையும் ஒருநாள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது  மகனே! நாம் பிறந்ததிலிருந்து சிறிய வருமானத்தில் ஏதோ வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எனக்கு ஒரு “பெரிய ஆசை” இருக்கிறது, என்றாவது ஒருநாள் நாம் சுறாவை பிடித்து விட வேண்டும். மேலும் அதை ஃபாரினுக்கு எக்ஸ்போர்ட் பண்ண வேண்டும், என்பதுதான் என்னுடைய பெரிய ஆசை. 

       ஆனால் நான் எப்போது சென்றாலும்  எனக்கு அது கிடைத்ததே இல்லை நீ கண்டிப்பாக ஒருநாள் சுறா மீன்கள் நிறைய பிடித்து அதை ஃபாரினுக்கு எக்ஸ்போர்ட் பண்ண வேண்டும்.      

           அதன் மூலம் நம்முடைய தற்போதைய நிலை மாற வேண்டும், என்பதே என்னுடைய “பெரிய ஆசை” என்று முடித்தார்.

           அப்பொழுதுதான் ஹென்றிக்கு  புரிந்தது தன் தந்தை எவ்வளவு பெரிய திறமைசாலியாக நிறைய மீன்கள் பிடித்து வந்தும் அவருக்குள்ளேயும் இவ்வளவு மன கஷ்டம் உள்ளது என்பதையும், மீன்களில் சிறந்த மீன் சுறா என்பதையும் அவன் அன்று புரிந்து கொண்டான். 

           இதுபோல் நாட்கள் கழிந்தன இவனும் பள்ளி சென்று வருவது, மீண்டும் தந்தையுடன் சென்று கடலில் மீன் பிடிப்பதை வேடிக்கை பார்ப்பது, எப்படியெல்லாம்  மீன் பிடிக்கிறார் தந்தை, என்பதை ஆராய்ச்சி செய்வது என்றே பல ஆண்டுகள் உருண்டு ஓடின. அவனுக்கும் வயது தற்போது 16 ஆகிறது அவன் தனியாக தற்பொழுது மீன் பிடிக்க ஆசைப்பட்டான்.

        தன் தந்தையுடன் அவன் மீன்பிடிக்க சொல்லும்போது, தந்தையிடம் கேட்டுக் கொண்டான், அப்பா! இன்று உங்களுக்கு பதிலாக நான் மீன் பிடிக்கிறேன் என்றான். தந்தையும் மகனின் மனநிலையை புரிந்து கொண்டு சரி மகனே! நீ செய் என்று அவனிடம் மீன் வலையை கொடுத்தான். 

        அவன் தன் தந்தையின் மன வேதனையை புரிந்து கொண்டவனாய் முதல் முறை நாம் மீன் பிடிக்க வலையை வீசுகின்றோம் என்பதை மனதில் கொண்டு “கடவுளிடம் வேண்டிக் கொண்டான்” கடவுளே எனக்கு முதல் மீன்பிடியிலேயே என் அப்பாவின் ஆசையான சுறா மீன் கிடைக்க வேண்டும். என்று பலமுறை வேண்டிக்கொண்டு வலையை வீசினான். 

         சிறிது நேர இடைவெளிக்குப்பின் மீன் வலையை இழுக்க தொடங்கினான், அவனுக்கு பெரும் அதிர்ச்சி! காத்துக்கொண்டிருந்தது. ஆம் அவன் கடவுளிடம் வேண்டிக் கொண்டது பலித்து விட்டது. அவன் வலையில் கிட்டத்தட்ட பத்து சுறா மீன்கள் கிடைத்தன. 

           அவனால் அவன் ஆச்சரியத்தை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. அதை விட அவன் தந்தைக்கு தன் மகனின் இந்த வீர செயலை கண்டு உச்சி முகர்ந்து! மகனை கட்டியணைத்து மகிழ்ச்சி அடைந்து கொண்டார். 

                 இவர்கள் இப்படி மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே வேலையில் மீனவ கிராமத்தில் 50 குடும்பங்கள் இருந்த இடத்தில் சில பேருக்கு பரவலாக ஒரு நோய் பரவி இருந்தது. ஆம்! அது ஒரு “தோல் நோய்”, அந்த தோல் நோய்க்கு  சுறாவிடமிருந்து கிடைக்கும் எண்ணையை வைத்து மருந்து தயாரித்து பூசினால் மிக விரைவாக அந்த தோல் நோய் குணமாகும் என்று வந்த வைத்தியர் கூறி சென்றார்.

      அந்த மீனவ கிராமத்தில் வசித்து வந்த அனைவருக்கும் சுறா மீன் பிடிப்பது என்பது பெரும் பாடாக எண்ணி வந்தனர் அந்த வேலையில் ஹென்றி அந்த பத்து மீன்களை பிடித்து இருந்தான்.

                ஹென்றியின் தந்தை அவனின் செயலால் “மிகவும் மகிழ்ந்து” அந்த மீனவ கிராமத்தில் இருந்த 50 குடும்பத்தில் உள்ளவராலும்  சாதிக்க முடியாததை, தன்மகன் சாதித்ததாக எண்ணி “மிகவும் பூரிப்பில்” வியந்து! கொண்டு சந்தோஷமாக இருவரும் சேர்ந்து கடலின் கரையை அடைந்தனர். 

         ஹென்றியின்  தந்தை நான் நினைத்தது போல் இனிமேல் நம் குடும்பம் பெரிய நிலைமைக்கு சென்று விடும் இந்த சுறாக்களை ஃபாரினுக்கு எக்ஸ்போர்ட் செய்துவிடலாம் என்று நினைத்து இருவரும் வந்தனர். ஒவ்வொரு சுறாவும் கிட்டத்தட்ட 50 இல் இருந்து 100 கிலோ வரை எடை கொண்டதாக பெரிய பெரியதாக இருந்தது. 

                  அந்த சுறாவிடம் இருந்து கிடைக்கும் வருமானமும் ஏறத்தாழ அவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாகும்.

           ஹென்றியின் தந்தையும் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு  கரைக்கு வந்தார். ஆம் அந்த 50 குடும்பங்களில் ஏற்பட்ட நோயின் விவரம் பற்றி அவர்கள் இருவருக்கும் இதுவரை தெரியாது ஏனென்றால் இவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கடலுக்கு சென்று விட்டனர். 

              50 குடும்பத்தில் உள்ள மீனவர்களும் எப்படியாவது சென்று நாம் சுறாவை பிடித்து வந்து நம் குடும்பத்தில் உள்ள இந்த தோல் நோயை சரி செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து பலவாறு யோசித்தவாறு அங்கே சென்று கொண்டிருந்தனர் 

                    அப்பொழுது ஹென்றியின் நண்பன் டேவிட் அங்கே வந்தான், ஹாய்! ஹென்றி உன்னை ஒரு வாரமாக காணவில்லையே! எங்கு சென்று இருந்தாய், என்று விசாரித்தான். 

          ஹாய்! டா நானும் என் அப்பாவும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று விட்டோம், என்று கூறினான். 

      மேலும் அவன் முதன்முறையாக மீன்பிடித்ததையும் அதில் அவனுக்கு கிடைத்த சுறாவை பற்றியும் கூற அவனுக்கு ஆவல் அதிகமாக இருந்தது, எனவே தன் நண்பனிடம், டேவிட் நான் முதல்முறையாக இன்று தான் மீன் பிடித்தேன்,அதுவும் உனக்கு விஷயம் தெரியுமா! என் வலையில் யாருக்கும் கிடைக்காத 10 சுறா கிடைத்துவிட்டது என்று மிகவும் பூரிப்புடணும்! ஆச்சரியத்துடனும்! அவனிடம்  விழிகள் பிதுங்க கூறினான்.

            டேவிட்டும் ஆச்சரியத்தில்! விழிகள் பிதுங்க  என்னடா! ஹென்றி  சொல்ற!  நம்ம மீனவ காலனியில் தற்போது என்ன பிரச்சனை நடந்து கொண்டிருப்பது என்று உனக்கு தெரியுமா! என்று ஆச்சரியமாக! விழி பிதுங்க கேட்டான், ஹென்றிகோ மீனவர் கிராமத்தில் நடந்த எதுவும் தெரியாததால், ஒன்றும் புரியாமல் திகைத்து என்னடா! என்ன தான் ஆச்சு என்று கேட்டான். 

          நம்ம மீனவ காலனியிலுள்ள 50 குடும்பத்திலிருந்தும் மீன்பிடிக்கும் அனைவரும் சுறா மீன் பிடிப்பதற்காக ஆளுக்கு ஒரு வலையை எடுத்துக் கொண்டு கடலுக்கு செல்வதாக நின்று கொண்டிருக்கிறார்கள், என்று அவன் பேசி முடித்தான்.

          ஏன் இவ்வளவு நாளா இல்லாமல் இப்பொழுது மட்டும் என்று கேட்டான். உனக்கு விஷயமே தெரியாதாடா, நம்ம கிராமத்துல “ஒரு தோல் நோய்” அனைவருக்கும் பரவிகொண்டிருக்கிறது. அந்த நோய் குணமாக மருத்துவர் சுறா மீனிலிருந்து கிடைக்கும் ஒரு மருந்தை பயன்படுத்தினால் குணமாகும் மற்றும் மற்றவருக்கும் பரவாது, என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். 

        அந்த நோய் மிகவும் வேகமாக அனைவருக்கும் பரவிக் கொண்டிருக்கிறது, அதை குணப்படுத்த மற்றவர்களும் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்றான்.

                 தற்பொழுது நீ சொன்ன இந்த சுறா கிடைத்த விஷயம் மிகுந்த  ஆச்சரியத்தையும்! புதிய தெம்பையும் கொடுத்துள்ளதாக கூறினான். நான் இந்த விஷயத்தை உடனே சென்று நம் ஊர் முழுவதும் சொல்லப் போகிறேன்,  என்று கூறி குடுகுடுவென்று ஓடினான்.

               இதை கண்ட ராபர்ட்க்கு  பேரதிர்ச்சியாக அமைந்தது, ஏனெனில் சுறாவை எக்ஸ்போர்ட் பண்ணி பல மடங்கு பணம் பார்க்கலாம் என்று நினைத்தவருக்கு, ஆனால் ஹென்றிக்கு எப்படியாவது நம்மூரில் உள்ள நோயை குணப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்.

       தன் தந்தையிடம் சென்று அடுத்த முறை நாம் பிடிக்கும் சுறாவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம், தற்பொழுது நம் ஊரிலுள்ள நோயை நாம் குணப்படுத்த வேண்டும், அது நமக்கும் தானே வரும் என்று கூறினான் பொறுமையாகவும் பொறுப்பாகவும், 

       அதைக் கேட்ட தந்தை மனம் கூனி குருகி  சே…. இவ்வளவு வயதாகியும் நம்மிடம் இல்லாத இந்த நல்ல குணம் நம் மகனிடம் இருக்கிறதே! இன்று தன் மகனை நினைத்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்.

               இருவரும் சேர்ந்து அந்த மீனை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று வைத்தியரை பார்த்து, நீங்கள் இதிலிருந்து மருந்து தயாரித்து எங்கள் ஊரிலுள்ள  அனைவரையும் காப்பாற்றுங்கள்! என்று கூறினர். 

               இதை கண்ட ஊர் மக்கள் அனைவரும் ஹென்றியின் திறமையை பாராட்டி பேசினர்.  மேலும் இராபர்ட்டும்,  அவர் மனைவியும் குழந்தையை மிகவும் நல்லவனாக வளர்த்திருக்கிறார்கள் என்று தாய் தந்தையையும் சேர்த்து புகழ்ந்து தள்ளினர்.

      ” ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் ” என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க இன்று இராபர்ட்யின்  மனம் அவ்வளவு பூரிப்பிலும்! சந்தோஷத்திலும்! பெருமகிழ்ச்சியிலிருந்தது.. அவன் அந்த மீனை விற்று “பெரிய பணக்காரனாக” ஆகியிருந்தால் கூட அவ்வளவு சந்தோஷத்தை அவன் மனம் பெற்றிருக்குமா! என்று தெரியவில்லை, ஆனால்! தற்பொழுது தன் ஊரிலுள்ள அனைவரும், தன் மகன் பிடித்த மீன் தான் அனைவரையும் காப்பாற்றியது, என்று ஊர் மக்கள் அனைவரும் அவனை புகழ்ந்ததை கேட்டவனுக்கு என்ன செய்வது என்று அறியாமல் விழியின் ஓரம் “ஆனந்த கண்ணீர்” பெருக்கெடுத்து ஓடியது. 

          தன் தந்தை “அழுவதை” கண்ட ஹென்றிக்கு, தந்தை மகிழ்ச்சியில்தான்! அழுகிறார் என்று புரியாமல் அய்யய்யோ!! நாம் மீனை கொடுத்து விட்டோம், என்று தந்தை கஷ்டப்படுகிறார், என தந்தையை ஆறுதல்படுத்த தந்தையின் பக்கம் வந்தான்.

       அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள்! நான் அடுத்த முறை “கண்டிப்பாக” மீண்டும் பத்துக்கு மேலே சுறாவை பிடித்து அதை தங்களிடம் கொடுத்து நம் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடுவேன். ப்ளீஸ் அழாதீங்க என்று ஆறுதல் கூறினான். 

          தன் மகனின் இந்த  செயலைக் கண்ட தந்தைக்கோ என்ன கூறுவது என்றே தெரியவில்லை, பின்பு தன் மகனை கட்டி அணைத்து “என் செல்லமே”, என்று கூறியவர் அவன் நெத்தியில் முத்தமிட்டார்.

          அப்பாவின் அந்த அரவணைப்பில் ஹென்றி மிகவும் நெகிழ்ந்து விட்டான். 

     அந்த 50 மீனவ குடும்பத்தில் உள்ளவர் யாருக்கும் கிடைக்காத அந்த சுறா, ஹென்றிக்கு கிடைக்க அவன் சிறு வயதிலிருந்தே தன் தந்தை கூறிய வார்த்தைகளை மனதில் எண்ணி எண்ணி ஒருவொரு நாளும் அவன் மனதில் கணக்கு போட்டுக் கொண்டிருந்த அந்த எண்ணமே அவனுக்கு சுறா மீனை பிடித்துக் கொடுத்தது. என அனைவரும் நம்பினார் அவனும் அதை மிகவும் நம்பினார். 

        சுறாவுடன் வாழ்ந்த அந்த ஒரு நாளில் ஹென்றியின் வாழ்க்கையே மாறிவிட்டது. ஆம் தற்போது ஹென்றியின் புகழ் அந்த மீனவ கிராமத்தின் உச்சியில் பறந்தது. 

      ஆம் நாம் சிறுவயதிலிருந்து எதை எண்ணி ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டுகிறோமோ, அதுவாகவே நாம் மாறுவோம். எண்ணம் தெளிவாக இருந்தால், செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதே இந்த கதையின் முழு கருத்து 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!