இரத்தின புருஷ்

by Admin 4
43 views

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை என்பது, மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவரம்.

நிலத்தில் வளரும் சிறு செடி வகையை சேர்ந்தது.

ஐயோனிடியம் சபருடிகோசம் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செடி, ஆசிய நாடுகளில் அதிகப்படியாக காணப்படுகிறது.

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை.

ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும்.

ஓரிதழ் தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம்.

நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் நோய் குணமாகும்;

உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் நீங்கும்.

இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

உடல் எடை குறைய ஓரிதழ் தாமரை கஷாயம் சிறந்த மருந்தாக உள்ளது.

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும்.

👉🏻தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர்.

👉🏻இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.

இதன் சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும்.

சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன் மூலம் இழந்த ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும்.

ஓரிதழ் தாமரையை பயன்படுத்தி காயகல்பம் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

வெள்ளை நரை போக்க…
தலைமுடி வெள்ளையாக நரைத்து விடுதல் தற்போது பெரும் பிரச்னை. இதற்கு சிறந்த எளிய தீர்வு, மருதோன்றி இலையாகும்.

இந்த மருதோன்றியுடன்,
நிலவாரை என்பதை சேர்த்து இடித்து, நீர்விட்டு அரைத்துப்பூசி வந்தால் தலை முடி விரைவில் கறுப்பு நிறம் பெறும்.

மனித உடலில் தோன்றும் தோல்
வியாதிகளுல் படர்தாமரையும் ஒன்று. இதை, அருகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து, படர்தாமரையில் பூசி வர, படர்தாமரை மெல்லமெல்ல மறைந்துவிடும்.

✴️பின் குறிப்பு:

🔸தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.

🔸சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!