கல்லூரி காதல்
இன்று கல்லூரியின் முதல் நாள்
நான் நுழைவாயில் நுழையும் போதே அவனை கண்டேன் அங்கு இருந்த திண்டின் மீது அமர்ந்து உள்ளே வரும் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்து கொண்டிருந்தது ஒரு குரூப் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்தான்.
அவனைப் பார்த்தவுடன் எனது பள்ளி காலங்களில் யாரையும் பார்த்து தோன்றாத ஒன்று அவனைப் பார்த்தபோது தோன்றியது அவனே இனி உன் வாழ்க்கை என்று தோன்றியது அதை என் அருகில் என் உடன் வந்த எனது உயிர் தோழியிடம் சொல்ல அவள் என்னை பார்த்து பார்த்தவுடனே காதலா முதலில் படிப்பை பார் என்று எனக்கு அட்வைஸ் செய்தாள்.
ஆனால் நான் அவள் கூறுவதை கேட்காமல் எனக்கு இத்தனை வருடம் யார் மேலும் வராத ஒரு உணர்வு இவன் மேல் வந்துள்ளது என்று கூறினேன்.
அதற்கு அவள் இனிமேல் கடவுள் விட்ட வழி முதலில் ஒழுங்காக படிப்பை பார்ப்போம் அதற்கு அப்புறம் காதலி என்றால் நானும் சரி என்று அவளிடம் கூறிவிட்டு எங்கள் வகுப்பறையை நோக்கி சென்றேன்.
ஆனால் அந்த குரூப்பில் உள்ள ஒருவன் எங்கள் இருவரையும் பார்த்து அங்கே அழைத்தான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டு அங்கே சென்றோம் அவர்களில் ஒருவன் என்னிடம் உனது பெயர் என்ன என்றான் நான் அதற்கு என்னுடைய பெயர் வெண்ணிலா என்று கூற எனது தோழியின் பெயரை கேட்க அவள் சந்திரா என்றால்
சீனியர் மாணவன், தோழிகள் பெயரே வெண்ணிலா சந்திரா நிலா பெயரா இருக்கு என்ன பேசி வச்சிட்டு பெயர் வச்சாங்க ளா உங்க அப்பா அம்மா சரி எந்த கிளாஸ் படிக்கிறீங்க
வெண்ணிலா, ஆமா அண்ணா எங்க அப்பா அம்மா அவ அப்பா அம்மா சொந்தக்காரங்க நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்ததுனால சந்திரா வெண்ணிலா பேர் வச்சாங்க நாங்க பிகாம் பர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கும்
சீனியர் மாணவன், ஒய் பாப்பா நான் அண்ணன் கிடையாது என் பெயர் அஜய் அண்ணா கூப்பிடாத
வெண்ணிலா, ஹலோ சீனியர் நானும் பாப்பா கிடையாது நான் வெண்ணிலா
சீனியர் , சரி பாப்பா இல்ல வெண்ணிலா சரி சரி ஆமா சீனியர் கூப்பிட்ட உடனே ஒரு பயம் இல்லாம நீ பாட்டுக்கு வந்து நிக்க நாங்களா ராக்கிங் பண்ணுவோம் இல்ல அந்த பயம் உன்கிட்ட இல்லையா தைரியமா வந்து நிக்க
வெண்ணிலா, ஐயோ சீனியர் நான் எதுக்கு உங்களை பார்த்து பயப்படணும் இந்த காலேஜ்ல தான் ராக்கிங் கிடையாது எனக்கே தெரியுமே பின்ன எதுக்கு நான் பயப்படனும் நீங்க தான் என்னோட அண்ணா மாதிரி தானே அதனால நான் யாரை பார்த்து பயப்பட மாட்டேன்
சீனியர், அப்படியா அப்ப நாங்க எல்லாருமே அண்ணா மாதிரியா
வெண்ணிலா, ஐயோ சீனியர் அந்த ப்ளூ ஷர்ட் தவிர மீதி எல்லாரும் எனக்கு அண்ணா மாதிரி தான் என்னடா இது ப்ளூ ஷர்ட் மட்டும் சொல்றது பாத்தீங்களா எனக்குள்ள ஒரு கிரஷ் வந்துருச்சு அது லவ்வா மாறுமானு எனக்கே தெரியல அப்படி மாறுச்சுனா பாத்துக்கிடுவேன் ஆனா இப்ப இருந்தே அவங்கள மட்டும் அண்ணான்னு கூப்பிட மாட்டேன் மத்தபடி நீங்க எல்லாரும் அண்ணா தான்
அதுவரை அமைதியாக இருந்த அந்த ப்ளூ ஷர்ட் அவளைப் பார்த்து முறைத்தான் தான் உட்கார்ந்து இருந்த திண்டிலிருந்து வேகமாக இறங்கி அவள் அருகில் வந்து இங்க பாரு படிக்க வந்தால் படிக்க மட்டும் பாரு அத விட்டுட்டு கிரஸ் லவ் ன்னு சுத்திக்கிட்டு இருக்காதே இனிமே இப்படி பேசுறதை பார்த்தேன் உன்னை பிரின்ஸ்பல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஒழுங்கா இப்ப போய் படிக்கிற வேலைய பாரு என்று கடுமையாக கூறிவிட்டு தனது வகுப்பை நோக்கி கிளம்பினான் அவனது நண்பர்களும் விக்ரம் விக்ரம் என்று கத்திக் கொண்டே அவன் பின்னால் சென்றனர்
அவன் சொல்வதை பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவை சந்திரா தோளை உலுக்கி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்
அதில் அவளை திரும்பி பார்த்த வெண்ணிலா ஏ சந்து உன்னோட அண்ணா பெயர் விக்ரம் பாத்தியா எவ்வளவு நல்ல பேப்பர் விக்ரம் வெண்ணிலா வெண்ணிலா விக்ரம் எப்படி பெயர் பொருத்தமே சூப்பரா இருக்குல்ல என்றாள் .
சந்திரா, சரிடி வந்த முதல் நாளே ஆரம்பிக்காத மொத படிப்ப பாரு அந்த அண்ணா தான் தெளிவா சொல்லிட்டு போறாங்க இல்ல இனியாவது அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத வா நமக்கு கிளாஸ்க்கு டைம் ஆகுது வா போவோம் என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள் அவளும் சரி மெதுவா அவங்கள பார்க்கலாம் அப்படின்னு நினைச்சு அவள் பின்னால் தன்னுடைய வகுப்பறைக்கு சென்றாள்.
வகுப்பறைக்கு சென்றவுடன் இவர்கள் ஒரு பெஞ்சில் அருகருகே அமர்ந்தனர் சந்திரா வெண்ணிலா இருவருமே நல்ல கலகலப்பான பெண் என்பதால் வந்த முதல் நாளே அனைத்து மாணவ மாணவிகளுடன் நட்பாக பழகினர் அவர்களும் இவர்களுடன் நட்பாக பழகினர் முதல் நாள் என்பதால் ஆசிரியர் அவரவர் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு பாடம் நடத்தவில்லை
மறு நாளில் இருந்து தினமும் காலையில் விக்ரம் அமர்ந்து இருக்கும் அந்தத் திண்டின் அருகே நின்று அவனை ஒளிந்து நின்று அவனைப் பார்த்துவிட்டு அவன் சொல்லியது போல் அவனை டிஸ்டர்ப் பண்ணாமல் தனது வகுப்பறைக்கு சென்று விடுவாள்.
அவன் பெயர் விக்ரம் அவன் எம் காம் ஃபர்ஸ்ட் இயர் படிப்பதாகவும் அவன் விடுதியில் தங்கி இருப்பதாகவும் சக மாணவர்கள் மூலம் அறிந்து கொண்டால் ஆனால் அவனை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணவில்லை அவனும் இவள் ஒளிந்து நின்று பார்ப்பது தெரிந்தாலும் தன்னை டிஸ்டர்ப் பண்ணாத வரை நல்லது என்று கண்டுக்காமல் விட்டு விட்டான்.
இப்படியே வேகமாக நாட்கள் செல்ல விக்ரம் பைனல் இயரும் வெண்ணிலா பிகாம் பைனல் இயரும் வந்தனர் இதற்கு மேல் விட்டால் விக்ரம் காலேஜ் முடிச்சு சென்று விடுவான் என்பதால் வெண்ணிலா தன் காதலை அவனிடம் தெரிவிக்க முயன்றால் அவன் இவள் முயற்சியை கண்டு கொண்டு இவள் கண்ணில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் இருவரும் தனியாக சந்திக்கும்போது வெண்ணிலா தன் மனதில் உள்ளதை அவனிடம் சொல்ல அவன் தனக்கு விருப்பமில்லை என்று நேரடியாக கூறிவிட்டு அவளிடம் ஒழுங்காக படிப்பை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் அவன் அப்படி சொன்னதும் தன் மனம் உடைந்த வெண்ணிலா அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தனது வீட்டிற்கு வேகமாக கிளம்பி சென்று விட்டால்.
கல்லூரி முடிந்து சந்திரா அவளை காணாமல் தேடிக் கொண்டிருக்க தான் வீட்டில் இருப்பதாக அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள் வெண்ணிலா அதை படித்த சந்திர வேகமாக வீட்டுக்கு சென்று பார்க்க அவள் அழுது கொண்டு இருந்தால் அவள் அம்மா அப்பா யாரும் வீட்டில் இல்லாத காரணத்தால் அவள் அழுது கொண்டிருப்பது யாருக்கும் தெரியவில்லை
உடனே சந்திர அவளை சமாதானப்படுத்தி காரணம் கேட்க அவள் தன் விக்ரமிடம் தன் காதலை சொல்லியதும் அவன் மறுத்ததையும் கூறினால் அதன் பின் ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி தூங்க வைத்த சந்திரா தனது வீட்டிற்கு சென்றாள்.
அதன் பிறகு ஒரு முடிவு எடுத்த வெண்ணிலா இனிமேல் அவனை சந்திக்கக் கூடாது என நினைத்துக் கொண்டு தன் படிப்பை மட்டும் பார்த்தால் எவ்வளவுதான் முயன்றாலும் அவனை சந்திக்காமல் இருக்க முடியவில்லை எப்போதும் போல் ஒளிந்து நின்று அவனைப் பார்த்து மட்டும் விட்டு வந்தால் தினமும் இதுவே தொடர பைனல் இயர் கடைசி எக்ஸாம் என்று மறுபடியும் விக்ரமை பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டால்
மேற் படிப்புக்காக தனது தாய் தந்தையிடம் சொல்லிவிட்டு இங்கு இருந்தால் தன்னால் விக்ரம் நினைவு இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு சந்திராவுடன் வெளிநாட்டிற்கு படிக்க சென்று விட்டாள் வெளிநாட்டில் என்னதான் படிப்பு என்று இருந்தாலும் அவளுக்கு எப்போதும் விக்ரம் நினைவாகவே இருந்தது ஒரு வழியாக அங்கே படித்து முடித்துவிட்டு அங்கேயே வேலையும் கிடைத்துவிட அங்கே வேலை பார்த்தனர் இருவரும்.
அங்கு ஒரு வருடம் மட்டும் வேலை பார்த்துவிட்டு தனது அப்பா அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப வீட்டிற்கு வந்தால் அவர்கள் அவளுக்கு திருமணம் ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதாக தகவல் மட்டும் கூறினர் மாப்பிள்ளை யாரென்று யாருமே கூறவில்லை அதில் பயந்த வெண்ணிலா தன்னால் விக்ரம் இல்லாமல் வாழ முடியாது என நினைத்தவள் அவன் நண்பர்களிடம் விசாரித்து விக்ரமை சந்திக்க முயன்றால் ஆனால் அவன் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை அதில் மிகவும் மனம் உடைந்த வெண்ணிலா தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
அதன் பிறகு தனக்கு பார்த்த மாப்பிள்ளை இடம் விக்ரமின் பற்றி சொல்லிய பிறகு அந்த வாழ்க்கை ஏற்க வேண்டும் இல்லை என்றால் தாய் தந்தைக்காக அவனை ஏமாற்றுவதாக இருக்கும் என்று நினைத்தவள் தந்தையிடம் சென்று மாப்பிள்ளையின் போன் நம்பர் கேட்டாள் அதுக்கு அவரும் போன் நம்பர் கொடுக்க அவள் முதலில் அவனுக்கு போன் போட அதை அட்டென்ட் பண்ணி அந்த மாப்பிள்ளை ஹாய் நிலா ஐ அம் ஆதி எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா என்றான் அதற்கு வெண்ணிலா சாரி எனக்கு உங்களை பிடித்திருக்கிறதா என்னன்னு தெரியல நான் காலேஜ் படிக்கும்போது ஒருத்தர விரும்பினேன் ஆனால் அவர் என்ன விரும்பல எனக்கு இப்பவும் அவருடைய நினைவுகள் இருக்கத்தான் செய்து ஆனா எங்க அப்பா அம்மாவுக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கொள்கிறேன் ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அவங்களை மறக்க முடியுமா தெரியாது. ஆனால் உங்களுடைய அன்புல நான் அவங்களை மறக்க முயற்சி பண்றன் எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க என்றால்
அவனும் சரி நீங்க அப்ப என் போட்டோவை பாக்கலையா என்றான் அவளும் இல்ல போட்டோவை நான் பார்க்க வில்லை இதுக்கு சம்மதம்னா சொல்லுங்க நாளைக்கு கல்யாணம் பண்றதுக்கு மணமடைக்கு வாரேன் இல்லைன்னா இப்பவே ஏதாவது காரணத்தை சொல்லி நானே கல்யாணத்தை நிப்பாட்டி விடுறேன் என்றாள்
அவனும் எனக்கு சம்மதம்தான் நீங்க நிம்மதியா மணமடைக்கு வாங்க நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி பிரண்ட்ஸா இருந்துட்டு அதுக்கு அப்புறமா லவ் பண்ணலாம் என்றான் அவளும் ரொம்ப ரொம்ப நன்றி ஆதி என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டால் இருந்தும் விக்ரமின் நினைவுகள் அவளை பாடாய்படுத்தியது அதற்கு மேல் அவளால் முடியாமல் ஒரு தூக்க மாத்திரை மட்டும் போட்டு தூங்க ஆரம்பித்து விட்டால் அவள் அம்மா வந்து பார்த்துவிட்டு அவள் தூங்கட்டும் என்று விட்டுவிட்டு சென்றுவிட்டார்
சாயங்காலம் 5 மணி அளவில் எல்லோரும் மண்டபத்திற்கு கிளம்பினார் இவளும் மன வருத்தத்துடன் மண்டபத்திற்கு கிளம்பினால் காலையில் 6:00 மணிக்கு முகூர்த்தம் என்பதால் மூன்று மணிக்கு எழுப்பி விட்டு அவளை ரெடி பண்ண ஆரம்பித்தனர் அவரும் வெளியே தன் தாய் தந்தைக்காக சிரித்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கிளம்பி கொண்டு இருந்தாள்
பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்ற ஐய்யரின் அழைப்பில் தோழிகள் படைசூழல வெண்ணிலா மண மேடைக்கு சென்றாள் அவள் அமர்ந்த உடன் ஐயர் சொல்லிய மந்திரங்களை உடன் சொல்ல மாப்பிள்ளை இடம் தாலியை ஐயர் கொடுத்தார்
அந்த தாலியைப் பார்த்த வெண்ணிலா தன் மனதிற்குள் இனிமேல் விக்ரமின் நினைவுகளை தான் நினைக்க கூடாது அப்படி நினைத்தால் அது தனக்கு தாலி கட்டும் கணவனுக்கு தான் செய்யும் அவமரியாதை என நினைத்தவள் கண்ணை மூடி தன் கண்ணீரை மறைத்தார் அப்போது அவள் காதலி அருகில் என்ன நிலா உனக்கு நான் தாலி கட்டட்டுமா என்றான் அந்தக் குரலை கேட்டவள் ஒரு நிமிடம் தன் உலகை மறந்தாள் இது அவனே தான் அவனே அவனே அவன் மட்டும் தான் என்று நினைத்தவள் வேகமாக திரும்பிப் பார்க்க அங்கு அவள் மனம் கவர்ந்த விக்ரமே அமர்ந்திருந்தான் அதை பார்த்த வெண்ணிலா அவள் மனதில் இது எப்படி சாத்தியம் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் விக்ரமும் அவளை பார்த்து கண்களை சிமிட்டி நான் தான் விக்ரம் விக்ரம் ஆதித்யா என்றான்
அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த வெண்ணிலா வேகமாக அவனை கட்டிக் கொண்டால் அவனும் அவளை விலக்கி விடாமல் அப்படியே தனது கையால் அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் அதன் பின் அவளை விலக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ நிலா என்றான்.
அதைக் கேட்டு நிலா மிகவும் மகிழ்ச்சியாக ஐ லவ் யூ விக்ரம் ஐ லவ் யூ என்றால் மற்ற சடங்குகளை இருவரும் மகிழ்ச்சியாக செய்து முடிக்க இருவரையும் விக்ரமின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்
அது ஒரு தனி வீடாக இருந்தது அந்த வீட்டில் விக்ரம் மட்டுமே இருந்தான் வேறு யாரும் இல்லை அதை நினைத்து அவனைப் பார்க்க
அவனும் அவளைப் பார்த்து இனிமேல் நீ மட்டும் தான் எனக்கு எல்லாம் நான் சிறுவயதில் இருந்து ஆசிரமத்தில் வளர்ந்ததால் எனக்கு யாரும் இல்லை அதனால் தான் நான் உன்னை ஏற்க மறுத்தேன் இப்போது என்னை ஏற்றுக் கொள்வாயா என்றான். அதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலா உன் முதல் சொந்தமும் கடைசி சொந்தமும் நானாக இருப்பேன் என்று அவனுக்கு வாக்கு கொடுத்து அந்த வீட்டில் விளக்கேற்றி தனது புதிய வாழ்க்கையை தொடங்கினாள் .
கல்லூரியில் முதல் நாள் பார்த்த உடனே அவன் மேல் தொடங்கிய காதல் அவன் தன்னை வெறுத்த போதும் அவனையே நினைத்துக் கொண்டு படித்து முடித்து வெளிநாட்டில் வேலைக்கு பார்த்தவள் இப்போது பெற்றோர் சம்மதத்துடன் அவனை திருமணம் முடித்து அவன் வீட்டில் வந்து வாழ ஆரம்பித்து விட்டால் உண்மையான காதலாக இருந்தால் எத்தனை பிரிவுகள் வந்தாலும் கடைசியில் நம்மை சேர்த்து விடும்.
நன்றி
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ஸ்டார் கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்
உங்கள் அன்புடன் நான்
ரியா ராம் .
கல்லூரி காதல்
previous post