எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
பெயர் : சுரேஷ் பாபு
வயது 27
திருமணம் ஆகவில்லை.
முகவரி: 142- செந்தூரம் சூப்பர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்,
2ம் மெயின் ரோடு ஆழ்வார் திருநகர் சென்னை – 600 087
கல்வி : B.Sc., M. A.
பொழுது போக்கு: டேபிள் டென்னிஸ். சைட் அடிப்பது
குணம் : காதலியை தெய்வீகமாக கருதி பழகுவேன்.
லட்சியம : காதல் திருமணம் செய்வது.
சம்பளம் : ₹18, 000
விண்ணப்படிவம் : இது 9வது. நிச்சயமாக எனக்கு நேர் கானல் அனுப்பி வைப்பீர்கள் உறுதியாக நம்புகிறேன்.
அன்பே….! வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தே இந்த காதல் விண்ணப்பம் அனுப்பி வைக்கிறேன். எனக்கு உங்களை பற்றி சில விஷயங்கள் தெரியும.
முருக பக்தை ஆதலால் தான் இன்று தை பூசம அன்று என் காதல் விண்ணப்பம் அனுப்புகிறேன்.
பிறகு… கணிதத்தில் புலி. கணிதத்தில் ஆராய்ச்சி செய்ய விரும்புவர். நிச்சயமாக நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கி விடுவீர்கள் என முழுதாக நம்புகிறேன். எனக்கு நீங்கள் உயிர். உங்களுடன் மனம் விட்டு பேச விரும்புகிறேன்.
இடம்.. நாள்.. நேரம்.. எல்லாம் உங்கள் விருப்பம். தயவுசெய்து பதில் அனுப்ப மறக்காதீர்கள்.
இதுவே என் கடைசி காதல் விண்ணப்பமாக இருக்க வேண்டும். இதுவே என் பிரார்த்தனை, பிரியம் எல்லாம்.
அன்பரே… இறுதியாக நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தயவுசெய்து என்னை புறக்கணிக்க செய்யாதீர்கள். உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் பக்க துணையாக இருப்பேன. நாம் இருவரும் இணைப்பிரியா கணவன மனைவியாக வாழலாம்.
இது தான் என் விண்ணப்பம். உங்கள் இடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். உங்களை சந்திக்க பெரும் ஆவலாக இருக்கிறேன்.
தயவுசெய்து விண்ணப்பத்திற்கு பதில் அவசியம் போடுங்கள். உங்கள் நினைவாகவே இருக்கும்… உங்கள் மீது தீராத காதல் கொண்டு இருக்கும்… உண்மையான காதல் கொண்டு இருக்கும்…
உங்கள் சுரேஷ் பாபு.. !
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.