எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
இரண்டு வருடங்களுக்கு முன் கோடம்பாக்கம் பஸ் ஸ்டாபில் ஒருவன்… கதிர் என்பவன் தன் காதலை தெரியப் படுத்தினான். நான் எதுவும் யோசிக்காமல் ” சரி ” என்றேன் பின்னர் தினமும் என்னோடு பேசுவான்.
அவன் உண்மையில் காதலிக்க வில்லை. என் உடல் மட்டுமே அவனுக்கு வேண்டும். ஆம். காதல் அல்ல. காமம் மட்டுமே வேண்டும். இதை புரிந்து கொண்ட நான் விலகினேன். அவன் தினமும் சினிமா போகலாம் வா என்று பாடிய பாட்டியை திரும்ப திரும்ப கேட்டான். அவனுக்கு என் மீது கை வைக்க ஆசை.
இன்று அவன் ஆக்ரோஷமாக வந்தான். கையில் ஒரு பாட்டில் இருந்தது. அவன் இன்று சினிமாவிற்கு வராவிட்டால் என் மீது ஏசிட்… அமிலத்தை என் முகத்தில் வீசி விடுவேன். பயம் வந்தது. நான் சுதாரித்து கொண்டேன்.
அவன் பாட்டிலை திறக்க முயற்சி செய்த போது நான் சட் என்று அவன் கையில் இருந்து பாட்டிலை பிடுங்கினேன். ஒரு நொடி தான். நான் அமிலத்தை அவன் முகத்தில் அல்ல அவன் உடல் முழுவதும் ஊற்றினேன். ஆடை பற்றி கொண்டது. உடல் முழுக்க முழுக்க அமிலத்தின் பயனை தந்து அவனை கீழே தள்ளியது. அவன் துடி துடித்தான.
உடனே 108 க்கு போன் செய்தேன் . ஆம்புலன்ஸ் வந்தது. அவனை கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு எடுத்து சென்று அவசர நிலை பகுதியில் அட்மீட் செய்தேன்.
பிறகு வருவதாக சொல்லி வடபழனி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தேன். நான் நடந்தது எல்லாவற்றையும் சொன்னேன். காவல் அதிகாரி புறப்படுங்கள் மருத்துவ மனைக்கு என்று சொல்லி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனை வந்து சேர்ந்தோம்.
அவனுக்கு மயக்க ஊசி போட்டு விட்டனர். வலி தாங்க முடியாமல் தவித்தான். டாக்டர் போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் சொன்னார் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் உடல் முழுவதும் தோலில் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர் தனது உடல் அழகை 100% இழந்து விடுவார.
சரி என்று சொல்லி விட்டு என்னை போலிஸ் ஜீப்பில் என்னை என் ஆபிசில் கொண்டு வந்து விட்டார்.
ஆம். காம கொடூரனுக்கு சரியான தண்டனை..!
அவள் உண்மையில் ஜான்சி தான்…!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.