எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
சூர்யா குன்னூரில் வேலை. மத்திய அரசு வேலை. பானுமதியும் ஊட்டி தான். ஆனால் அவர் தபால் துறையில் வேலை. ஆம். குன்னூரில்.
காலை ஊட்டி பஸ் ஸ்டாப்லிருந்து இருவரும் பயணிப்பவர்கள். குன்னூரில் பஸ் ஸ்டாப் பக்கமே பானுமதி அலுவலகம். சூர்யாவின் அலுவலகம் 2 மேடுகள் ஏற வேண்டும்.
பஸ்சில் பேசிக்கொண்டே செல்வார்கள். பானுமதி கல்யாணம் ஆனவரா இல்லையா..? என சூர்யாவிற்கு தெரியவில்லை. பானுமதி கழுத்தில் தாலி இல்லை. இவர்கள் பொதுவான விஷயங்கள் மட்டுமே பேசுவார்கள்.
ஒரு நாள்…. பஸ்சிலிருந்து இறங்கிய உடனே பானுமதி சூர்யாவிடம் பேச வேண்டும்… ஏதாவது ஹோட்டலுக்கு போவோம் என்றார். சூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி. நல்ல ஹோட்டலில் இரண்டு காபி ஆர்டர் செய்து விட்டு சூர்யாவிற்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தார்.
” எதற்காக…? ” இது சூர்யா. ” எனக்கு டைவர்ஸ் கிடைத்து விட்டது. அவன் ஒரு சேடிஸ்ட். ஒவ்வொரு நாளும் என்னை சித்தரவதை செய்தான். என் உடல் முழுக்க சிகரெட்டால் சூடு வைப்பான். கல்யாணம் முடிந்த உடனே அவன் ஒரு சைக்கோ என்று உணர்ந்தேன்.
நேற்று தான் விவாகரத்து கிடைத்தது. இப்போது நான் ஜாலியாக இருக்கேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லா விட்டால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்…! “
சூர்யாவிற்கு அதிர்ச்சி..!
நிச்சயமாக என்று சொல்லி… தனது கையை பானுமதி கையுடன் குலுக்கினார்.
பலே சூர்யா….!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.