காதல் பேசும் பிப்ரவரி: முகமூடிக் காதல்

by admin 2
30 views

எழுதியவர்: நா. பத்மாவதி

மழை தூவிக் கொண்டிருந்த இருள் படர்ந்த ஒருநாள்,  கவிதாவின் மனதில் ஒற்றைக் கவிஞனாய், பாடகனாய் அவன் நிழல் நிஜத்தையும் தாண்டி நிலைத்தது. 

அவளது பள்ளிக் காலம்  நினைவுக்கு  வரும் போது அவனும் நிழலாடுவான்.   

பதின்பருவத்திற்கே உரிய செருக்கான நடை, நானே அழகி என்ற கர்வம் எல்லாம் கவிதாவின் நடையில், அவை அனைத்தையும் ரசிக்கிறான்  அவன் என்பதுத் தெரிந்து ரசித்தாள் கவிதா.

அவன் எழுதிய கவிதைகளையும்,  ஜன்னலோர பாடும் நிலவாக அவன் குரலோசையும் கேட்டு ரசிப்பாள்.  அவனோடு பேசி, பழகியது இல்லை ஏதோ ஓர் தயக்கம் நிழலாய்… உண்மையை மறைக்கும் ஓர் முகமூடிக் கவசமாகத் தடுக்கும்.

அவனுக்கும் ஓர் காரணமற்ற தயக்கம், படிக்கும் பெண், அழகானவள், நம்மை விரும்புவாளா?? சுமாராக இருக்கும் என்னை அவளுக்குப் பிடிக்குமா? இப்படி பல யோசனைகள். முகமூடியின் பின்னால் காதல் வளர்ந்தாலும், அதை வெளிக் கொண்டு வர முடியாது என்ற  உண்மை அவன் நினைவை மறைத்தது.  

அவனுக்கு வேறு பெண்ணோடு திருமணம்.  அவளுக்கும் வேறு ஆடவனோடு திருமணம் நடந்தது.  காலங்கள் கடந்தும், அவ்வபோது நிஜமும் நிழலும் இடைவேளையின்றி மோதிக் கொண்டு இருந்தன. சொல்லாத காதல் இல்லாமல் போகவில்லை.

முகமூடிக்குப் பின்னால் மறைந்திருந்த காதல் உண்மையா, பொய்யா? காதலால் முகமூடியை அகற்ற முடியுமா?  பல்வேறு  மனப் போராட்டத்தோடு காதல் கேள்விகளால் வேள்வி செய்தது கவிதாவின் மனம்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!