இந்த ஆப்பிள்கள் உலகின் அரிதான ஆப்பிள் வகைகளில் ஒன்றாகும்.
ஜப்பானில் தோன்றிய இது, அதன் தனித்துவமான சுவை மற்றும் கவர்ச்சியான தோற்றத்தினால் பிரபலமடைந்தது.
இது மஞ்சள், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறக்கலவை கொண்ட பழமாக அறியப்படுகின்றது.
இந்த ஆப்பிள் தேன், பேரிக்காய் மற்றும் புளிப்பு சுவைகளின் கலவையாக இருக்கும்.
இது பொதுவான ஆப்பிள் வகைகளை விட பெறுமதியானது.
கிகு ஆப்பிளுக்கு குளிர்ந்த காலநிலை அத்தியவசியமானது. இதுவே அதன் தனித்தன்மைக்கும் முக்கிய காரணமாகும்.
கிகு ஆப்பிள்களின் எண்ணிக்கை, பயிர் செய்கை மற்றும் விநியோகத்தின் போது, அவற்றின் தனித்தன்மைக்காக மட்டுப்படுத்தப்படுகிறன.
கிகு ஆப்பிள்கள் மற்ற ஆப்பிள்களுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டவையாகும்.
அவை சிறப்புச் சந்தைகளில் அதிகமாக விற்கப்படுகின்றன.
பெரும்பாலும் இவை சாலடுகள், இனிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் சாறாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.
சுருக்கமாக கூற வேண்டுமாயின்,இது ஆப்பிள் விரும்பிகளால் போற்றப்படும் சுவையுலக பொக்கிஷமாகும்.