தேவையான பொருட்கள்
சங்கு பூக்கள் – 5 அல்லது 6
தண்ணீர் – 1 கப்
தேன் – தேவையான அளவு
செய்முறை
சங்கு பூக்களின் காம்புகளை நீக்கிவிடவும்.
தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து ஒரு கோப்பையில் எடுத்துக் கொள்ளவும்.
அதில் காம்பு நீக்கிய சங்கு பூக்களை போடவும்.
மூன்று நான்கு நிமிடங்கள் கழித்து சல்லடையில் வடிகட்டவும்.
தேவையான அளவு தேன் கலந்து பருகவும்.