சிட்டுவேஷன்ஷிப் என்பது காதல் மற்றும் நட்புக்கும் இடைப்பட்ட ஒரு தெளிவற்ற உறவு நிலையாகும்.
ஜோடிகளிடம் ஈர்ப்பு மற்றும் பாசம் இருக்கும்.
ஆனால், முறையான ஒரு உறவில் இருப்பதற்கான உறுதியோ அல்லது பொறுப்புணர்வு இருக்காது.
சிட்டுவேஷன்ஷிப்பில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன.
* உறவின் நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிய தெளிவான விவாதம் இருக்காது.
* ஒருவருக்கொருவர் நேரம் செலவழிப்பதில் ஆர்வம் கொள்வர்.
* முறையான டேட்டிங் போல அடிக்கடியோ அல்லது சரிவர திட்டமிடப்படாமலும் இருக்கும்.
* கைகோர்த்தல், முத்தமிடுதல் போன்ற தொடுதல்கள் இருக்கும்.
* சமூக ஊடகங்கள் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உறவை பற்றி தெரியப்படுத்துவதில் தயக்கம் கொண்டிடுவர்.
சிட்டுவேஷன்ஷிப்பில் ஈடுபடுவதற்கான காரணங்கள்
* பொறுப்புக்களை ஏற்க தயாராக இருப்பதில்லை.
* முன்னாள் உறவில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டு வர ஒரு முறையான உறவில் ஈடுபடுவதற்கு முன், சிட்டுவேஷன்ஷிப் மூலம் தங்களை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம்.
* தன்னம்பிக்கை குறைவாக கொண்டிருப்பது.
* தயக்கம் காட்டுவது.
சிட்டுவேஷன்ஷிப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள்
நன்மைகள்
* ஒரு முறையான மற்றும் நிலையான உறவில் இருப்பது போன்ற அழுத்தம் இல்லாமல் இருந்திட முடியும்.
* கட்டுப்பாடற்ற தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
* தனக்கான சரியான துணையை தேர்ந்தெடுக்க உதவும்.
தீமைகள்
* உறவின் நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிய தெளிவின்மை, குழப்பம் மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.
* உறவு முறிந்தால், ஒருவருக்கொருவர் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படலாம்.
* நிலையற்ற உறவில் நேரத்தை வீணாக்குவது.
ஆகவே, மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பின் நன்றாக யோசித்து சிட்டுவேஷன்ஷிப்பில் இருப்பதை பற்றி முடிவெடுத்திடலாம்.
சிட்டுவேஷன்ஷிப்
previous post