செம்புற்று சிம்பிள் கேக்

by Nirmal
180 views

தேவையான பொருட்கள் 

  • செம்புற்று பழங்கள் – வேண்டிய அளவு சின்னதாய் வெட்டிக் கொள்ளவும் 
  • செம்புற்று பழங்கள் – ஒன்னும் பாதியுமாய் அரைத்து கொள்ளவும் 
  • சீனி – தேவையான அளவு 
  • வெண்ணிலா எசன்ஸ் – 1 கரண்டி 
  • முட்டை – 1 
  • பால் – தேவையான அளவு 
  • எண்ணெய் – 2 கரண்டி 
  • கோதுமை மாவு – தேவையான அளவு 
  • பேக்கிங் பவ்டர் – 1 கரண்டி  
  • உப்பு – தேவையான அளவு 
Sweet strawberry cake sample picture 1

செயல்முறை 

  • பௌல் ஒன்றில் முட்டை, சீனி மற்றும் வெண்ணிலா எசன்ஸ் கலந்து நன்றாக கிண்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர், அக்கலவையில் பால் மற்றும் எண்ணெய்யை கலந்துக் கொள்ளவும்.
  • தொடர்ந்து, கோதுமை மாவு, தேவையா அளவு உப்பு மற்றும் பேக்கிங் பவ்டரையும் கொட்டி கிளறவும்.
  • இறுதியாக, நறுக்கிய மற்றும் அரைத்த செம்புற்று பழங்களை பௌலில் கொட்டி பதமாக கிண்டிடவும் .
  • மிதமான சூட்டில் அடுப்பை பற்ற வைத்திட வேண்டும்.
  • அதில் சிறிய கரண்டி அளவில் பட்டரை சேர்த்திட வேண்டும்.
  • பின்னர், பௌலில் இருக்கின்ற செம்புற்று கலவையை அடுப்பில் கொட்டி நிரப்பிட வேண்டும்.
  • ஏறக்குறைய, 15 நிமிடங்களுக்கு மிதமான நெருப்பில் கேக் கலவையை வேக வைத்திட வேண்டும்.
  • கடைசியாக, தட்டு ஒன்றை கொண்டு பானையை கவிழ்த்து கேக்கை வெளியெடுக்கவும்.
  • சூப்பரான வீக்கெண்ட் கேக் ரெடி.   
  • அதை வெட்டி அனைவருக்கும் பரிமாறிடவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!