பழமொழி :
மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!
விளக்கம் :
பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள்.
எனவே மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் என்பதால், அந்த சமயத்தில் தண்ணீர் தேவை இருக்காது.
அப்போது மழை பெய்தாலும் பயிர் விளைச்சலை பாதிக்கும்.
இதன் காரணமாக தான் மார்கழி மழை மண்ணுக்கு உதவாது என்றார்கள் நம் முன்னோர்கள்.