உடலை குளிர்ச்சியாக்கும் தன்மைக் கொண்ட உணவுகளில் தயிரும் ஒன்றாகும்.
இதை காலை உணவாகவும் உண்ணலாம் விருப்பத்திற்கு ஏற்றாற் போல பழங்களோடும் சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் புரதம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி-12 மற்றும் பல ஊட்டச்சத்துகள் கொண்ட ஒரு உணவாகும்.
அதிலிருக்கும் நல்ல பாக்டேரியாக்கள் மனித உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்திடும்.
தயிரில் இருக்கின்ற புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறிகளை போக்கிடவும் இது உதவிடும்.
செரிமானத்தை சுலபமாக்கி, மலச்சிக்கலையும் குறைத்திடும் தயிர். நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும்:
வலுவான எலும்புகளுக்கு தயிரை உண்ணலாம். உடல் எடையை குறைக்க விரும்புவோர் கூட கட்டாயம் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி பல நன்மைகள் கொண்ட தயிரை நாமும் உண்டு ஆரோக்கியம் பேணுவோம்.