தாய்லாந்து ஸ்டைல் இறால் பிரட்டல் 

by Nirmal
166 views

தேவையான பொருட்கள் 

  • இறால்கள் – தேவையான அளவு 
  • தாய்லாந்து வேர்க்கடலை சாஸ் – தேவையான அளவு 
  • சின்ன வெங்காயம் – 10 (சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
  • இஞ்சி – 1/2 (அரைத்துக் கொள்ளவும்)
  • பூண்டு – 6 (இடித்துக் கொள்ளவும்)
  • தக்காளி – 1 (நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
  • கறிவேப்பிலை – சிறிதளவு 
  • உப்பு – தேவையான அளவு 
  • எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை 

  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய விடவும்.
  • சூடேறிய அடுப்பில் நறுக்கிய வெங்காயங்கள், இஞ்சி பூண்டு சேர்த்து கிளறவும்.
  • அவைகள் பொன்னிறமாக மாறிய பின்னர் தாய்லாந்து வேர்க்கடலை சாஸை அடுப்பில் ஊற்றி நன்றாக எண்ணெய்யில் கிண்டிடவும்.
  • பின், இறால்களை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கிளறி தொடர்ந்து தக்காளியை போட்டு கிண்டிடவும்.
  • இறுதியாக, உப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு மொத்தத்தையும் கிளறி எடுத்து தட்டில் வைத்து பரிமாறிடவும்.
sample picture of
Thailand peanut sauce shrimp

You may also like

Leave a Comment

error: Content is protected !!