ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் அருகே உள்ள ஊருக்கு நடந்து சென்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புத்தர் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாகவும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரும்படி ஒரு சீடரை அனுப்பி வைத்தார்.
உடனே ஆற்றை நோக்கி விரைந்தார் சீடர், அப்போதுதான் அவருக்கு முன்பாக ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கியிருந்தது.
புத்தரிடம் வந்து “அந்த ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்தாக இல்லை குருவே!” என்றார்.
“இல்லை, இல்லை.அது அப்படி இருக்காது..நீ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் ஒருமுறை சென்று பார்த்து விட்டு வா…”என்றார் புத்தர்.
உடனே ஆற்றை நோக்கி விரைந்தார்.சிறிது நேரம் கடந்த பின்பு, கிளம்பிச் சென்ற சீடர் ஆற்று நீர் தெளிவாக இருந்தைக் கண்டார்.
பின் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தார் அந்த சீடன்..
தண்ணீர் அருந்திவிட்டு அந்த சீடனைப் பார்த்து புத்தர் இவ்வாறு சொன்னார்.,
”நீ தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆற்றுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றுநீர் கலங்கி விட்டது.
மேலும் நான் தண்ணீர் கேட்டபோது,எனக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, நீ பதற்றத்துடன் சென்றதால்,
உன்னால் ஆற்று நீர் கலங்கி இருப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
கலங்கிய நீரை போன்றுதான் மனமும், அதாவது, குழம்பிய நீர் எப்படி குடிக்க ஏற்றதாக இருக்காதோ, அதுபோல குழப்பமான மனநிலை முடிவெடுக்க ஏற்றதல்ல.
எனவே ஒரு முடிவை அவசர கதியில் எடுப்பதோ, கோபத்தில் எடுப்பதோ தவறாகவே முடியும்” என்று போதித்தார்..
”இது போலத்தான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்தில் இருக்கும்போது அதை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்,
சிறிது நேரம் சென்றதும் அது தானாகவே தெளிவு அடையும். சிறிது நேரம் பொறுமையாக இருங்கள்,
மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டியதில்லை. அது தானாக அமைதி அடையும்.
பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். பொறுமையே மனதினைப் பக்குவப் படுத்தும்.
தெளிவற்ற மனம்
previous post