பஞ்சபூதங்களின் ஏப்ரல்: தரிசு  நிலம்

by admin 2
68 views

எழுதியவர்: உஷாராணி

தேர்வு செய்த தலைப்பு: நிலம்

ஆ…. வலிக்குதே  என்று  பொய்யாக சிணுங்கினாள்.   தன் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து  ரசித்தாள்.   

ஜெயா தன் குழந்தை வயிற்றில்   பூ போன்ற  பிஞ்சு கால்களால்   எட்டி  உதைப்பதை  ரசித்தாள்.    .  கண்ணாடி முன் நேராகவும்  , பக்கவாட்டில்நின்று மேடிட்ட வயிற்றை தடவிக் கொண்டாள். 

கண்ணீர்  வந்தது. எத்தனை வருடங்களாக குழந்தை இல்லை.   குத்தி காண்பித்த பேச்சுக்களால்  மனம் சலித்து  இருந்தாள்.

திருமணமாகி   குழந்தை இல்லாத காரணத்தால் கணவனின் அன்பையும் இழந்தாள். 

மாமியார்  இவள் வயிற்றில்  கட்டி இருந்த  தலைகாணியை   பிடுங்கி  எறிந்தாள்.  . குழந்தை பெத்துக்க வழியில்லை. தரிசு நிலமாகி  போன வயிற்றில் என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறாய் . பைத்தியக்காரி  என்று  கத்தினாள்.

குழந்தை பிறக்காத தன் வயிற்றை தரிசு நிலத்துடன் ஒப்பிட்டதை  கேட்டு  மனம் வலிக்கவில்லை.  

பெரிதாக சிரித்தாள்.

அவளுக்கு  பைத்தியம்  என்ற பட்டப் பெயரும்  கூடுதலாக கிடைத்தது.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!