அகவும் மயில்
காலை நடை பயிற்சியில்
மயில்கள் நடக்கும்
தோகை விரித்தாடும்
அங்கும் இங்கும் பறக்கும்
அழகை ரசித்தேன்
மாலை நடை பயிற்சியில்
அந்தி சாயும் வேளையில்
மயில்கள் தன் தலையை
மேல் நோக்கி அகவும் ஒலியை
ரசிக்க முடியவில்லை
குறையில்லாத படைப்பு இல்லை
என எண்ணி வியந்தேன்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)