அடங்காத மனிதர்களை கண்டு
கொதித்து தான் போனதென்னவோ?
கழிசடைகளை காவு வாங்க
நல்ல ஆத்மாவும்
கூட போனதென்னவோ?
அதிகம் ஆடாதே
அடுத்த நொடி
உனக்கு சொந்தமானது அல்ல!
என் நிலம் இது
ஆறடியும்
நிரந்தரமாய்
உனக்கு சொந்தமானது அல்ல
-பூமி மாதா-
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
