நசுக்கப்பட்டது திராட்சை!
உடலுடைந்து உருகியது
உலர்ந்து உயிர்விடாது
உணர்வுக்குள் உரமேற்று
உள்ளுக்குள் தவமேற்று
தனக்குள்ளே தனைத்தேடி
துளித்துளியாய் உயிர்கோர்த்து
காலம் கடந்திட
கனிவாய் காத்திருந்து
கனியானது உருமாறி
மிடுக்காய் தனைமீட்டு
கோப்பைக்குள் கீரிடமாகி
கொண்டாடப்படுகிறது!
அற்புதமாகும்வரை ஆர்ப்பாட்டமின்றி
ஆத்மார்த்தமாய் உழைத்தால்
அடையாளம் அதுவாய்
அரியணையை அலங்கரிக்கும்
எனும் மெய்மையை மொழிந்து!
புனிதா பார்த்திபன்