அண்டம் எல்லாம் நிறைந்திருக்கும் ஈசனே
உன்னை என் பிண்டத்தில் என்று காண்பேனோ
பால்வெளி அண்டத்தில்
பாதை மாறாமல் சுற்றும்
கோள்கள் போல்
உன் பாதம் சுற்றி வருகிறேன்
மோக்ஷம் எனும் தீக்ஷை தா
அண்டமே பிண்டமாம்
பிண்டமே அண்டமாம்
உணர்தல் எப்போது அதை
புரிதல் எப்போது
பித்தனாகி உனை தேடுகிறேன்
சித்தனாகி உன் திருவடி பற்றுகிறேன்
முக்தி தா முக்கண்ணனே
என் உச்சந்தலையில் இருக்கும்
ஆயிரம் இதழ் கொண்ட
சகஸ்ரார தாமரையில்
பாதம் பதித்து நீ ஆடும்
ஆனந்த நடனம் காண்கையில்
இப் பிரபஞ்சமே நானானேனே
— அருள்மொழி மணவாளன்