அந்தி மாலை பொழுது
வானம் நிலவுக்கு
பாலமிடும்…
பாலம் நமக்கு மேடையிடும்….
ஆறும் கடலுடன் ஜோடி
சேரும்…
மேடைப் பூக்களும்
உன் முக மலர்வை கண்டு நாணம் கொள்ளும்…..
பூ மகளோ…..
தேவதையோ…
என தேடல் கொள்ளும்…
அந்தி மாலை வானில் பாடும் பறவைகள் போல் ஜோடி சேர
மேகம் நமக்கு பாலமிடும்…
— இரா. மகேந்திரன்–