அன்னை
பத்து திங்கள் வலியோடு
வேதனையோடு என்னை
சுமந்தாய் எனக்கு பிடிக்காது
என்று உனக்கு பிடித்த
உணவுகளை புறம் தள்ளினாய்
வாந்தி எடுத்து கலைத்து
போனாய் சில நேரங்களில் சிறு
குழந்தையாய் மாறி என் முகம்
தெரியும் முன்பே என்னுடன் பேசி
கொண்டு இருந்தாய்
எனக்காக ஒவ்வொரு பொருளும்
பார்த்து பார்த்து வாங்கி
வைத்தாய் ஆனால் உனக்கு
என்ன அவசரம் நான் வந்து
உன்னை பார்ப்பதறக்கு முன்பே
நீ என்னை ஈன்று விட்டு
நிரந்தரமாக துயில் கொண்டாய்
உனக்கு என்னை பார்க்க ஆசை
இல்லையா என்னுடன் நேரில்
பேசி விளையாட விருப்பம்
இல்லையா என்னை சுற்றி
எத்தனையோ உறவுகள் இருந்தும்
என் மனம் உன்னை மட்டுமே
தேடும் அது உனக்கு தெரியாதா
நான் இவ்வளவு
கஷ்டப்படுவதை நீ நிழலாய்
இருந்து பார்த்து
வேதனைபடுவாயே நீ இல்லாமல்
எனக்கும் வேதனை நான்
இருந்தும் உனக்கும் வேதனை
இந்த வேதனைக்கு நீ
என்னையும் உன்னுடன்
அழைத்து சென்று
இருக்கலாமே அன்னையே……… 💕 ரியா ராம் 💕
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)