விண்ணுலவும் கோள்களும்
ஒன்றை ஒன்று சுற்றுதலும் பற்றுதலும்
தன்னுலகில் தன்னுடனே
எண்ணிலா உறவிருந்திடவே
எண்ணமதில் எண்ணுதலால்
தீர்க்கமாய் ஈர்த்திடுதோ
சந்திரனும் பூமியை
சுற்றியே வருகிறதா
பூமிதான் சந்திரனை
பக்கம் ஈர்க்கிறதா?
எதுவாயினும் எல்லாம் அன்பெனவே
பொதுவாய் உணர்கின்றேனே
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா