அன்பின் கரம் பிடித்து நடை பயில்கிறேன்
என்றோ ஒரு தூரத்து நிலவொளியில்
அம்மா சொன்ன கதையை சொல்லி
உறங்க வைக்கிறாள் மகள் ..
தாய் மடியில் கதை கேட்டு உறங்கிய
இரவொன்று ஓடி வந்து கட்டியணைத்து கொள்கிறது…
மகளென்று கையில் தந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்னை சுமந்து செல்லும் தாயவளே …
நீண்ட இடைவெளியோடு பணிக்கு செல்லும்
என் பயணங்களை கோர்த்து விடுமுறைக்கு
திரும்புகையில் மாலையொன்றை பரிசாக தருவேன்…
பதிலாக கிடைக்கும் முத்தங்களை என் உயிர்துளிகளோடு
ஒளித்து வைத்திடுவதில் பேரின்பம்..
என் மார்பில் கால் பதித்து
தலை உயரும் மகளின் சிரிப்பொன்றை
எப்போதும் சேகரித்து கொள்கிறேன்
வாழ்வின் வரமொன்று விரல் பிடித்து நடக்கிறது ….
🌺நிழலி