அன்புத் தோழிகளே,
உதைக்க உதைக்க நம்மை
முன்னேற்றும் மிதிவண்டி போல,
அவமானங்களை ஆணிவேராக்கு
தோல்விகண்டு துவளாது,,
துடிப்புடன் துள்ளியெழு!
உன்மீது வீசப்பட்ட கற்களை
வண்ணப் பூக்களாக்கு!
உதைபட உதைபட முன்னேறு!
மிதிவண்டி போல,,.
வீசப்பட்ட குப்பைகளை
வாரிச்சுருட்டிக் கொண்டு
தேங்கிடாது நதி போல
ஆர்ப்பரித்துத் துள்ளியோடு
உசிலம்பட்டியில் பிறந்த என் தோழியும்,
அரசம்பட்டியில் பிறந்த இந்த
அல்லிராணியும் இன்று
சுற்றி வருவதென்னவோ இந்த
அழகிய தேம்ஸ் நதிக்கரையில்
எங்கள் விஸ்வரூபம் கண்டு
வான்மகளும் நாணிச் சிவக்கிறாளோ!
அதோதெரியும் சிற்றுண்டிச்சாலையில்
தேநீர் அருந்திவிட்டு வருகிறோம்,
சற்றுப்பொறுங்கள் தோழிகளே!.
மு.லதா
படம் பார்த்து கவி: அன்புத் தோழிகளே,
previous post