அபிவிருத்தி எனும் பெயரால் ஆற்றை அழுக்காக்கினாய்
விஞ்ஞானம் எனும் பெயரால் விளைநிலத்தை வீணாக்கினாய்
ஆராய்ச்சி எனும் பெயரால் ஆகாயத்தை ஓட்டையாக்கினாய்.
ஆபத்து என்று தெரிந்தே
ஆயுதத்தை உருவாக்கினாய்.
மானிடா! உன் அதீத
வளர்ச்சியால்
இங்கே கருகிக் கொண்டிருப்பது கானகம் அல்ல
பல உயிர்களின் கருவறை.
😭😭
-மஞ்சு –