அருகிருக்கும் அருமருந்து……
வேப்பிலை போல் மருத்துவன் நீ….
கசப்பில்லாதவன்.
கடுகு காயத்தோடு கடைசியில் சேர்ந்தாலும்….
சுவை கூட்டுவாய் உரம் ஏற்றுவாய்…
இரும்பாய் இருந்து
இரத்தம் கூட்டுவாய்
கொழுப்பு கரைப்பாய்
செரிக்க வழி செய்வாய்…
நரையை தடுப்பாய்..
சுலபமாய் கிடைப்பதால் ஒதுக்குவர் அறிவிலிகள்….
சத்து மிக்கவன் நீ
எங்கள் சொத்து…
S. முத்துக்குமார்