அருணன் சுமந்து
வந்த
அழகு சூரியன்!
என் சாளரத்தின்
வழியே
புது சங்கதி சொல்வான்
தினம் தினம்!
தேனீரைக் கொஞ்சம்
வெந்நீராக்குவான்!
தன் தணல் பட்ட நீரிலே முகம் நனைப்பான்!
நனைத்த முகத்தையும்
நீரிலே நின்று ரசிப்பான்!
இன்றென்ன சங்கதி
என்றேன்!
இதயத்தில் ரசனை
இருந்தால் இப்படி கேட்ப்பாயா..
என்றான்!
பருவ காலங்களில்
இறைவன் வகுத்தவை
மாறாதிருக்க…நல்ல
மாற்றத்தை விதைக்க
விளையுங்கள்!
ஓடி ஓடி சேர்த்த சொத்து உள்ளே உறங்க _ காவலுக்கு
நீங்கள் வெளியே..
அள்ளிக் கொடுக்க வேண்டாம்.._ கிள்ளிக்
கொடுங்கள் இல்லாதோர்க்கு..
ஏனெனில் அருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லை!
நாளையும் வருவேன்
அடுத்த நாளும் வருவேன் _ நல்ல
மாற்றத்தால்
இவ்வுலகம் மாறும் வரை!!!
✍🏼 தீபா புருஷோத்தமன்