ஆவியில் வேக வைத்த உணவு
உடலுக்கு நன்று!
அலங்கார அழகி வாய்க்கு நன்று!
முழுதும் வேக வைத்தால்
குழந்தையும் குதுக்கலிக்கும்!
அரைவேக்காட்டு ஆஃப்பாயில் தக்காளியும்
சீஸ்சுமாக
அனைவர் வயிற்றையும் தகிக்கவைக்கும்!
ரொட்டி வயிற்றுக்கு கெட்டி!
சீமை உணவை சீமையில் உள்ளோரே
ஒதுக்க,
உள்ளூரிலோ அடிமை சாசனம் கொடுக்க,
கொண்டாட்டமாம்,
கொண்டாட்டமாம்!
பின்
திண்டாட்டமாம்,
திண்டாட்டமாம்!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
