அழகான குழப்பம்
காரிருள் மேகம்
மறைய கதிர்க்
கிரணம் வீச
உதயமான கதிரவன்
பகலவனின் வருகையை
பறைசாற்றும் செந்நிற
வானின் ஒளியைப்
பிரதிபலிக்கும் கடல்
கடலழகா வானழகா
என எண்ணத்தின்
கற்பனைக்கு உரு
கொடுத்த வார்த்தைகள்
வண்ணக் கோல்
கொண்ட ஓவியமாய்
புத்தகக் குறிப்பேட்டில் ????
குழப்பத்தில் குளம்பியோடு☕️
குழம்பிய கவிஞன்🫠
பத்மாவதி