அழகு மயிலே
மயிலே! மரகத மயிலே!
உன் அழகைக்
காண வரும்
வருணனின் வருகையை
முன் கூட்டி
அறிந்ததாலே தோகை
விரித்து வரையறை
இன்றி ஆடுகிறாயா!
மயிலே ……
உன் நடனத்தால்
சோலை சிலிர்க்கிறது
தோகையவளை மிஞ்சும்
தோகையின் வண்ணம்
மாதவனின் மயிற்பீலி
குமரனின் வாகனம்
பறவை வகையாயினும்
பறக்காது அன்னநடை
பயிலும் அன்னமே…
உன்னில் எத்தனை
வர்ணஜாலம்
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)