அவனும் அவளும்
மரங்கள் அறியாத
நெருக்கம் உண்டு
மண்ணுக்கும் வேருக்கும்
உலகறியா உன்னத
உறவு உண்டு
அவளுக்கும் அவனுக்கும்
இதயத்தின் ஆழமான
கனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன்
தேனிலா ஒளியில்
கண்களில் காதலோடு
தேவதையாக அவள்
முடிவில்லா சாலையில்
இணைந்த கரங்களோடு
செதுக்கிய சிற்பங்களாக
ஊடலும் கூடலுமாக
கனவுலக வேலிக்குள்
கடல் தீவுக்குள் அவர்கள்
பத்மாவதி