அவளும் தனது கை விரல்களின் நகங்களுக்கு ஒருநாளாவது வண்ணப்பூச்சுகளை பூசி விரல்களில் மோதிரம் அணிந்து தன் கைகளை அழகு படுத்ததான் ஆசைக்கொள்கின்றாள்….
ஆனால் அவளின் விதி தினமும் அவள் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பதால் அவளின் விரல்களிலும் நகங்களிலும் அவள் அனுமதியும் இன்றி தேயிலை கொழுந்து கறைகள் தான் படிகின்றன…
தினமும் தன் கைகளை அழகு படுத்த நினைக்கும் அவளின் மனதில் வேதனை குடிக்கொள்ள கண்களிலிருந்து கண்ணீர் அருவி…
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
