அவளும் நானும்
மித்திரன் நித்திரைக்கு நகர்ந்திட..
வான் வண்ணமயமாய் மிளிர்ந்திட..
புள்ளினங்கள் கவி பாடிட..
இளந்தென்றல் இளமைக்கு போட்டியிட..
ஜதி பேசும் கானங்கள் இசைத்திட..
சர்வமும் உயிர்பெறும் அரங்கேற்றமாய்
கால்பாதங்கள் கவிதையாய் நடனமாடிட..
அவளும் நானும்
இசையும் நடனமும்
காதலும் காமமும்
இரவும் பகலும்
மனதை கொள்ளை கொள்ள
இரசனையுடன் இரசித்து
கைகளைக் கோர்த்து
சிற்றிடை வளைத்து
அவளின் சமிக்ஞை நானறிந்து
என் சமிக்ஞை அவளறிந்து
மேனியை இசைக்கேற்ப சுற்றி
நெருங்கி வர விழிகளும் கலந்திட
உஷ்ணக்காற்றின் வெப்பத்தில்
ஸ்பரிசங்கள் உயிர் பெற்று உணர்வுற
இளமையை கொண்டாடி தீர்க்க
நிலவனின் வருகை மட்டும்
நடனமாடி மகிழ்ந்து களித்தோம்…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)