ஆண்டவனின்
பரமபத விளையாட்டில்
அவ்வப்போது
வெட்டுப்படும் மானிடர்கள்
நாமெல்லாம்
ஆணின்
அதிகாரமே சரியெனும்
அநியாய
தமிழ்ச்சமூகம் நமது
சதுரங்கத்தில் மட்டும்
ராணிக்கு
அதிக மதிப்பு .
மகிழ்ந்திரு
விளையாடு
ஜெயித்திடு
மன ஆட்டத்தை
இந்துமதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)