ஆண்டவன் சன்னிதியின் ஊதுபத்தி தூபமோ ..,
ஆசாமிகளின் ஆள்காட்டி விரல் அலங்கரிக்கும் வெண்குழல்
வத்தியோ.., மனையாளின் அள்ளி முடிந்த கூந்தல்
ஈரம் காய..
கணவன் கைகள்
தாங்கும் தூபக்காலின் சாம்பிராணி புகையோ..
ஓவியனின் தத்ரூப
தூரிகை புகையோ..
இடம் பொறுத்து..
இழுப்பதும் தள்ளுவதும்…
சூழியலின் மானுடவியல்!!
✍🏼 தீபா புருஷோத்தமன்.