ஆனந்தக் களியாட்டத்தின் பேரிரைச்சல்,
ஆசையாய் நடுவில் அழகான
மூன்றடுக்கு அணிச்சல்!
பிறந்தநாளா,திருமணநாளா,
புதுமனைப் புகுவிழாவா,
புதியவாகனத்தின்வருகையோ,
வருடத்தின் முதல்நாளா,…..
கொண்டாட்டம் எதுவானால் என்ன?
நம்மோடு பயணிக்கும் அணிச்சல்.
மேற்கத்திய கலாச்சார ஊடுருவலில்
பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டதே
இந்த அழகிய அணிச்சல்!
வர்ணங்கள் என்னவோ என்னைச்
சுவைத்துப்பார் என்கிறது.
ஆனால் செய்பொருட்களை ஆராய்ந்தால் அச்சமேற்படுகிறது,
அழகு என்றுமே ஆபத்துதானே,
அளவோடு சுவைத்தால் தவறில்லை.
அணிச்சலில் பாதியை அரிதாரமாகவன்றோ பூசிக்
களிக்கின்றது இன்றைய தலைமுறை!
வீணாக்குவதை உண்ண ஏங்குவோர்க்கு அளிக்கலாமே!
“சமத்துவ உலகம் படைப்போம்”
இது பல பெரியோர்கள் கனவு!
இன்றுவரை கனவாக மட்டுமே
உள்ளது.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)