அன்றொரு நாள் என் வீட்டில் என்றுமில்லா ஆனந்தம்.
கருப்பி ஈன்று எடுத்தாள் காளை அவனை.
தங்கமென மினுமினுக்க தாவி அணைத்தேன் அன்றவனை….
மூவிரண்டு ஆண்டுகள் முழுதாய் சென்றது முரட்டுக் காளை ஆனான் முகம் மினுங்க….
கட்டுக் கடங்காத ஜல்லிக்கட்டு காளையானான்.
என்னுடனே சென்றிடுவான் எல்லோரும் வியந்திடுவர்….
என் இனிய காளையவன் இல்லாமல் நானில்லை.
நன்றி ☺️
~ இந்துமதி ஜீவேந்திரன்.