ஆழ்கடலின் தோன்றும்
மென் அலைகள் காண்கையில்
மௌனமாய் தன்
இணை கரம் கோர்த்து
நடந்திட ஆசை தோன்றும்..
ஆழிப் பேரலையாக மாறி
அனைத்தையும் வாரி
பேரிரைச்சல் இட்டு
தன்னுள் சுருட்டி
அழிந்த பின்னர்
அமைதியாக இருக்கும்
ஆர்கலி காண்கையில்
அச்சமே மிச்சம்..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)