மணமேடை தந்த காதலும், நம்பிக்கையும்
கானல் நீராய் போனது ஏனோ
இணைந்த திசைகள்,
தூரம் ஆகி நெஞ்சுக்குள் தழுவும் வலிகள்,
ஒரு கணம், வாழ்ந்த சிரிப்புகள் பொய்யென ஆனது ஏனோ.
விழியில் வடியாத கண்ணீர்
இதழ்கள் மொழியாத வேதனை
உன் நினைவுகளை மட்டும் சுவாசிக்கிறேன்
நீண்ட இரவுகளின் பெருமூச்சில்.
வீழ்ந்துவிட்டதா காதலின் வீடு?
அதற்குள் வாழ்ந்த கனவுகள் காற்றில் கரைந்துவிட்டதா?
ஒரு பிரிவின் பயணம்,
புதிய வழிகளுக்கான தொடக்கம்.
-குரங்கி