இரட்டைக் கதவு குளிர் பெட்டி சீதனமென முடிவானது…
பத்தாத காசுக்கு என்ன செய்ய என அப்பா யோசிக்க அம்மா எனக் கத்தியது எங்க வீட்டு மாடு..
மாட்டை(பெண்) விற்க மாட்டை விற்றார் என் அப்பா கூடவே கன்றும்…
எல்லா செலவும் போக மீதமிருந்த காசில் தனிக் குடித்தனம்…
பாக்கெட் பால் காய்ச்சி புது வீடு புகுந்தோம்…
மீதப் பாலை ஃப்ரிட்ஜ் இல் வைக்கும் போது அம்மா எனக் கத்திய மாட்டு ஞாபகம் வராமல் இருப்பதில்லை இன்றுவரை…
கங்காதரன்