இரு காதல் பறவைகள்
மானும் மயிலும்
மகிழ்வில்துள்ளும்
சாயலில்
இதயமேடையிலே
கட்டி பிடித்து
கையைவீசி
கையை இழுத்து
கழுத்தை திருப்பி
தலையை ஆட்டி
விழியும்
விழியும்
கொள்ளையடித்து
அங்க அசைவில்
சங்க இலக்கியமாக
தேகத் தூரிகையை
தீட்டும் ஒரு
காதல் காவியத்தை
அரங்கேற்றம்
செய்கின்றனரே…
M. W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)