இரையைக் கடித்துக் குதறிவிட்டு கும்மாளம் போடுகிறாய்.
கொன்றதற்குப் பின் முதலைக் கண்ணீரை குளத்தில் கலக்கிறாய்
உன் உருவத்தைக் கண்டு ஓடி ஒளியும் விலங்குகளை
ஒளிந்திருந்து ஒரே நிலையில் விழுங்குகிறாய்.
உண்ட பசி ஆறுமுன்னே, மறு பண்டம் தேடுகிறாய்.
தண்டனை உனக்குக் கொடுக்க யாருமில்லையே,
பின் யாருக்காக இந்த முதலைக் கண்ணீர்?
சிவராமன் ரவி, பெங்களூரு.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)