படம் பார்த்து கவி: இறுக்கிய கயிறு

by admin 1
42 views

இறுக்கிய கயிறும்
கண்டிப்பும் ஒன்றே
மழலைகளிடம் கண்டிப்பு
அவர்களின் மகிழ்ச்சியின் தடை
கண்டிப்பு அதிகமானால்
வாழ்க்கை பிடிப்பு குறையுமே…..
கயிறு இறுகினால் அது
பிடித்திருக்கும் கரங்கள்
உடைய சொந்தக்காரனின்
இறுகிய மனதை படம்
பிடித்துக் காட்டுமே…
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு போல்
அதிகமான கண்டிப்பு
அனைவரையும் வெறுக்கச் செய்யுமே……
தேவை சிறிதளவு கண்டிப்பு
அதில் கிடைப்பது பலவித
அனுபவப்பாடம் என்பதால்
அழகிய வாழ்க்கை பயணத்தில் சாலைகளில் இருக்கும்
வேகத்தடை பாதுகாப்பான
பயணத்திற்கு உறுதி போல
கவனமான கண்டிப்பு
புவனத்தில் ஆர்வமான
வாழ்க்கைக்கு உறுதி
கண்டிப்பை குறைப்பதால்
மண்டியிட்டு உன் வாழ்க்கை
சண்டி செய்யாத பரி போல
ஓட உதவுமே……
கயிறின் பிடியினை தளர்த்துவோம்
சலனமில்லாத நதியில்
மனது என்ற படகினை செலுத்தி நிம்மதியுடன் வாழ்வோம்.

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!