ஈரைந்து திங்கள்
கரு சுமந்து
தாங்க முடியா வலி தாங்கி
பிறப்பு தந்து
உதிரத்தைப் பாலாக்கி
உயிரூட்டி இன்று
எங்கே சென்றாய்
எனதருமை தாயே
உன் படமதை வரைந்து
அதுதான் நீயென
அழுது அரற்றும்
இச்சிறு உள்ளம்
தேற்றி வாழ்விக்க
வாராயோ அம்மா
இந்துமதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)