உதிக்கும் சூரியனோடு உன் ஞாபகங்களும் உதயமாவதை தடுக்க முடிவதில்லை ரெட்டை ஜடை போட்டு அதில் ஒற்றை ரோஜா வைத்து லேடி பேர்டு சைக்கிளில் வரும் பேரழகை இன்று நினைத்தாலும் திரும்ப வருமா என ஏங்கி அடம் பிடிக்கும் என் குழந்தை மனதை என்ன சொல்லி சமாதானப் படுத்துவேன். தினம் ,தினம் இரவில் வரும் நிலவில் நீ தெரிவதால் என்னவோ கொஞ்சமாய் உறங்கி தான் போகிறது திருட்டு பூனை கண்கள். என்ன தான் உறங்கினாலும் அந்த உறக்கத்தில் வரும் கனவுகளில் நறுமணமாய் வீசிடும் உன் வியர்வையின் வாசனை ரோஸ்மேரிதான்! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: உதிக்கும்
previous post